( ரவிப்ரியா )
வரலாற்றுச் சிறப்பு மிக்கதும், பழமைவாய்ததுமான பெரியகல்லாறு திருவருள்மிகு மண்டபத்தடி ஸ்ரீ பிள்ளையார் ஆலய கும்பாபிNஷகம் கடந்தமாதம் 8ந் திகதி வெகு சிறப்பாக நடைபெற்று தொடர்ந்து 21 நாட்கள் மண்டலாபிNஷகம் நடைபெற்று 01.07.2014 செவ்வாய்க்கிழமை (1008) சங்காபிஷேகம் நடைபெற்றது.
ஆலயதலைவர் செ.நந்தகுமார் செயலாளர் கமல்ராஜ் பொருளாளர் ஆலயநிர்வாகிகள் சகிதம், பிரதிஸ்டா பிரதம குரு ஆகமகிரியாஜோதி சிவஸ்ரீ சதாகமலிங்க சிவகுருக்கள், மற்றும் ஆலய பிரதம குரு சைவ வித்தகர் சிவஸ்ரீ விஜயவர்மக் குருக்கள், மற்றும் குருமார் இணைந்து சங்காபிNஷகத்தை பக்தி பூர்வமாகச் செய்து வைத்தனர்.
இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசாவும் கலந்து கொண்டு கிரியைகளிலும் பங்கெடுத்தார். பெண் பக்தர்கள் நூற்றுக் கணக்கில் கலந்து கொண்டமை சிறப்பம்சமாகும்.
சங்காபிNஷகம் நிறைவடைந்ததும் கௌரவிப்ப நிகழ்வு ஆலய பரிபாலன சபையால் ஆலய முன் மண்டபத்தில் நடைபெற்றது. பிரதிஸ்டா பிரதம குருவிற்கு பொன் செல்வராசாவும், பொன் செல்வராசாவிற்கு ஆலயசெயலாளர் கமல்ராஜ்ம், ஆலய பிரதம குரு தம்பதிகளுக்கும் மற்றறைய குருவிற்கும் ஆலய பொருளாளர், உபசெயலாளர் ஆகியோரும் பொன்னாடை போர்த்திக் கௌரவித்தனர். பாராட்டுப் பத்திரமும் வாசித்து வழங்கிவைக்கப்பட்டது. குருமார் ஆசியுரையுடனும் பாராளுமன்ற உறுப்பினரின் உரையுடனும,; அதனைத் தொடர்ந்து அன்னதான நிகழ்வும் இடம் பெற்றது.
பாராளுமன்ற உறுப்பினர் தனதுரையில,; ஒதுக்குப் புறமாக இருந்த இந்தப் பகுதியை மதிப்பு மிக்க பகுதியாக மாற்றிய பெருமை இந்த நிர்வாகத்தின் இளைஞர்களையே சாரும். மிகச் சிறப்பான ஆலயம் ஒன்றை அமைத்து பிள்ளையாரின் அருளை அனைவருக்கும் பாலிக்கச் செய்துள்ளார்கள். எதிhகாலத்தில் முழுமையான ஒரு ஆலயமாக இதை அமைக்க வேண்டுமென்ற தனது ஆதங்கத்தையும் வெளியிட்டார்.
ஆலய செயலாளர் தனது நன்றியுரையில் பாராளுமன்ற உறுப்பினர் கணிசமான நிதி ஒதுக்கியுள்ளதாகவும், மேற் கொண்டும் ஆலய வெளிவீதியை வடிகான்களுடன் புனரமைத்து தரவேண்டும் என்ற கோரிக்கையையும் முன் வைத்தார். ஆலய கும்பாபிஷேகம் தொடர்பான அனைத்தத் தகவல்களையும் ஒழுங்காக உடனுக்குடன் உலகிற்கே முந்திக் கொண்டு வழங்கிய 'வற்றி நியூசுக்கும்' நிர்வாகம் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.












































