தமிழ் முஸ்லிம் மக்களின் உறவுப் பாலமாக ஈஸ்ட் லகூண் ஹோட்டல்

(சிவம், வரதன் & சதீஸ்)

மட்டக்களப்பில் உல்லாசப் பிரையாணிகளைக் கவரும் இடங்களுள் ஒன்றாக மட்டக்களப்பின் முத்து என அழைக்கப்படும்  ஈஸ்ட் லகூண் ஹோட்டல் திகழ்கின்றது. தமிழ் முஸ்லிம் மக்களின் உறவுகளை இணைக்கும் உறவுப் பாலமாகவும் இது உள்ளது.

இவ்வாறு கிழக்கு மாகாண உள்நாட்டு இறைவரித் திணைக்களப் பணிப்பாளர் எம். கணேசராஜா தெரிவித்தார்.


ஈஸ்ட் லகூண் ஹோட்டலின் முதலாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இதை அமைப்பதற்கு உதவிகள் புரிந்த அரச திணைக்களங்களின் தலைவர்கள் உட்பட யாபேருக்கும் உரிமையாளர் எம். செல்வராஜாவால் நன்றி செலுத்தும் நிகழ்வுகள் நேற்று சனிக்கிழமை மாலை இடம்பெற்றது.

இதல் கலந்து கொண்டு அவர் மேலும் தெரிவிக்கையில் இதுவரை காலமும் மட்டக்களப்பின் மரபுரிமை இடங்களான ஒல்லாந்தர் கோட்டை, கல்லடிப்பாலம், மற்றும் மட்டக்களப்பு வாவி என்பன அமைந்திருந்தன தற்போது ஈஸ்ட் லகூண் ஹோட்டலும் உள்வாங்கப்பட்டுள்ளது.

இலங்கையின் உல்லாசப்பிரையாணத்துறையின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் மையங்களுள் ஒன்றாக மட்டக்களப்பில் ரூபாய் 35 மில்லியன் செலவில் அமைக்கப்பட்டுள்ள இந்த ஹோட்டல் அமைந்துள்ளது.

மட்டக்களப்பு வர்த்தகர்களுக்கு முன்மாதிரியாக செல்வராஜா திகழ்கின்றார். அவரின் அயராத முயற்சி அனைவராலும் பாராட்டப்படவேண்டியது எனத் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில் இந்த ஹோட்டல் கடந்த 2013 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 22 ம் திகதி பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஸ பிரதம அதிதியாக கலந்து கொண்டு திறந்து வைத்து உரையாற்றுகையில் உல்லாசப் பிரையாணத்துறைக்கு மட்டக்களப்பில் இது தங்கச் சுரங்கம் எனக் குறிப்பிட்டிருந்தார். இதில் தனி மனிதன் செல்வராஜாவால் 100 பேருக்கு தொழில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் தமிழ் மற்றும் முஸ்லிம் வர்த்தக சங்கங்களினால் ஹோட்டல் உரிமையாளர் நினைவுச் சின்னங்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.

மதத் தலைவர்கள், மாவட்ட அரச அதிபர் பி. எஸ். எம். சாள்ஸ், மேலதிக அரச அதிபர் எஸ். கிரிதரன், முன்னாள் அரச அதிபர் எஸ் மௌனகுருசாமி, திணைக்களத் தலைவர்கள், வர்த்தகப் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.