கல்முனை ஸ்ரீ மாமாங்கப்பிள்ளையார் ஆலய வருடாந்த உற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பம்

(தனுஷ்கரன்)
ஸ்ரீ தெற்சனா கைலாசமென  வியந்து பாடல் பெற்ற தலங்களையும் புண்ணிய
தீர்த்தங்களையும் தன்னகதே  கொண்ட இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் கல்முனை மாநகரில் பண்டைய கால சரித்திரப் புகழ் பெற்ற ஆலயமான
கல்முனை ஸ்ரீ மாமாங்கப்பிள்ளையார் ஆலய வருடாந்த ஆடி அமாவாசை மகோற்சவ திருவிழா  17.07.2014 வியாழக்கிழமை காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.

ஆடிஅமாவாசைத் திருவிழாக்கள் தொடர்ந்து 10தினங்கள் வெகுசிறப்பாக நடைபெற்று எதிர்வரும் 26-07-2014 சனிக்கிழமை ஆடிஅமாவாசை தீர்த்த உற்சவத்துடன் இனிதே நிறைவு பெறவுள்ளது.