தங்கப்பதக்கத்தை வெற்றிகொண்ட கிழக்கு பல்கலைக்கழக கூடைப்பந்தாட்ட அணி

(சித்தாண்டி நித்தி) பல்கலைக்கழகங்களுக்கிடையிலான கூடைப்பந்தாட்ட போட்டியில்  கிழக்கு பல்கலைக்கழக பெண்கள் அணியினர் முதலாவது இடத்துக்கு தெரிவுசெய்யப்பட்டு தங்க பதக்கத்தை வெற்றிபெற்றனர்.

கடந்த 04.07.2014ம் திகதி தொடக்கம் 06.07.2014ம் திகதி வரை மொறட்டுவ பல்கலைக்கழகத்தில்  நடைபெற்ற இப்போட்டியில் கிழக்கு பல்கலைக்கழக பெண்கள் மற்றும் ஆண்கள் அணியினர் கலந்துகொண்டதுடன் முதன்முறையாக இவ்வருடம் பெண்கள்  அணியி னர் முதலாவது இடத்தை பெற்று தங்கப் பதக்கத்தை பெற்றுக்கொண்டதுடன் ஆண்கள் அணியினர் இம்முறை வெள்ளிப் பதக்கம் பெற்றுள்ளனர். கடந்த காலங்களில் நடைபெற்ற இப்போட்டியில் கிழக்கு பல்கலைக்கழக ஆண்கள் அணியினருக்கு தங்க பதக்கம் கிடைத்தமையும்  குறிப்பிடத்தக்கது.


நடைபெற்ற போட்டியில் சிறந்த விளையாட்டு வீரருக்கான தெரிவில் பெண்கள் அணியில் சானுஜா சிவலிங்கம், சிறந்த தடுப்பாட்ட வீரருக்கான தெரிவில் ஆர்.கே.டிலான்சம்பத் ஆகியோர் கிழக்கு பல்கலைக்கழக கூடைப்ந்தாட்ட அணியில் இருந்தே தெரிவாயிருந்தமை குறிப்பிடத்தக்கது. இவ்விரு அணியினருக்கும் பயிற்றுவிப்பாளராக உடற்கல்வி போதனாசிரியர் முத்துலிங்கம் பரணிதாஸன் வழிநடத்தியிருந்தார்.

நடைபெற்ற கூடைப்பந்தாட்ட போட்டியில் கிழக்கு பல்கலைக்கழகம், மொறட்டுவ, ஸ்ரீ ஜெயவர்த்தனபுர, சப்புரகமுவா, கொழும்பு,  மொறட்டுவ பழைய மாணவர் அணி ,ஸ்ரீ ஜோன் கொத்தலாவ பாதுகாப்பு பல்கலைக்கழகம் ஆகிய  பல்கலைகழங்கள் கலந்துகொண்டிருந்தன.