முத்தமிழ் கலை விழா -களுமுந்தன்வெளியில்

(கமல்)
மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரைப் பிரதேசத்தில் அமைந்துள்ள முன்னணிக் கலைக் கழகங்களுள் ஒன்றாகச் செயற்பட்டு வரும் களுமுந்தன்வெளி மரபுக்கலை பேணும், இரசிகர்புகழ், விநாயகர் கலைக் கழகத்தின் 28 வது ஆண்டு நிறைவினை முன்னிட்டும், களுமுந்தன்வெளி ஸ்ரீ முத்து மாரியம்மன் ஆலய வருடாந்த திருச்சடங்கின் இரண்டாம் நாள் மகர தோரண திருச்சடங்கினைச் சிறப்பிக்கும் முகமாகவும், “முத்தமிழ் கலை நிகழ்வு”  களுமுந்தன்வெளி விநாயகர் கலை அரங்கில் மிகவும் சிறப்பான முறையில் இடம்பெற்றன.

களுமுந்தன்வெளி விநாயகர் கலைக் கழகத்தின் தலைவர் மு.சவுந்தரராசன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கிராம பெரியோர்கள், கலைஞர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது “சயிந்தவன் சமர்” எனும் வடமோடி நாட்டுக் கூத்து, “அபிராமிப் பட்டர்” புராண நாடகம்,  “பிள்ளையார் காப்பு நடனம்” , “தேவிதரிசனம்” எனும் புராண நாடகம் என்பன மேடையேற்றப்பட்டன.

கலைப் பெருவழுதி சி.சிவகுமாரன் ஆசிரியர் அவர்களின் நெறியாழ்கையின் கீழ் கலை நிகழ்வுகள் யாவும் மேடையேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.