மட்டக்களப்பு கொத்துக்குளம் மாரியம்மன் ஆலய வருடாந்த தீர்த்தோற்சவம் - Video

(சிவம் & கலைச்செல்வன் )
மட்டக்களப்பு கொத்துக்குளம் மாரியம்மன் ஆலய வருடாந்த தீர்த்தோற்சவம் பிள்ளையாரடியிலுள்ள ஆலய தீர்த்தக் குளத்தில் இன்று சனிக்கிழமை நடைபெற்றது.

அம்பாளுக்கு வசந்த மண்டபத்தில் பூஜை இடம்பெற்று பொற்சுண்ணம் இடித்து தீர்த்தமாடுவதற்காக அம்பாள் அடியார்கள் சகிதம் திருமலை வீதி வழியாக தீர்த்தக் குளத்தைச் சென்றடைந்தது.

தீர்தோற்சவக் கிரியைகளை யாழ்வேலணை பெருங்குளம் முத்துமாரியம்மன் ஆலய பிரதம குரு தேவிபூஜா நிரந்தரர், சிவஸ்ரீ தியாகராஜ கோகுல சிவாச்சாரியார் ஆகியோர் நடாத்தினர்.

நேற்று வெள்ளிக்கிழமை (11) தேர்த்திருவிழா இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.