(தில்லை)
இலங்கையில் வாழும் சிறுபான்மை இனத்தைச்சேர்ந்த தமிழன் என்பதன் அடிப்படையிலேதான் ஒரு வெற்றி வீரனுக்கான கௌரவத்தினையும், பாராட்டினையும் இந்த நாட்டு அரசாங்கம் வழங்கவில்லை என்பது பாலுராஜ் புறக்கணிக்கப்பட்டதில் இருந்து புலனாகின்றது என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மு.இராஜேஸ்வரன் தெரிவித்தார்.
கராத்தே சுற்றுப்போட்டியில் தென்கிழக்காசியச் சம்பியனாக தெரிவு செய்யப்பட்ட சௌந்தராஜன் பாலூராஜ் அவர்களுக்கான கௌரவிப்பு விழா கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரி தேசியபாடசாலையில் கல்லூரி முதல்வர் எம்.ஸ் ரீபன் தலமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மு.இராஜேஸ்வரன் ஏனைய அதிதிகளாக சேனைக்குடியிருப்பு மகாவித்தியாலயத்தின் முன்னால் ஓய்வு பெற்ற அதிபரும் ஜப்பான் கராட்டி மறோசிக்கா அமைப்பின் கிழக்கு மாகாண தலைவர் கா.சந்திரலிங்கம் மற்றும் கல்லூரியின் பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கழந்து கொண்டனர்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய மாகாணசபை உறுப்பினர்
தெற்காசியாவிலே கராத்தே போட்டியில் இலங்கையைச்சேர்ந்த தமிழன் ஒருவன் தங்கப்பதக்கம் பெற்றமையை இட்டு இலங்கை நாட்டிலே பிறந்த ஒவ்வொருவனும் பெருமை கொள்ள வேண்டும் அதிலும் குறிப்பாக தமிழர்கள் அனைவரும் பெருமைகொள்ளவேண்டும்.
இந்த நாட்டைப்பொறுத்தவரையில் இங்குள்ள பெரும்பான்மை இனத்தினைச்சேர்ந்த ஒருவர் இந்த நிகழ்வில் இவ்வாரானவெற்றியினை பெற்றிருப்பார்களாயின் அவர்களை இந்த நாடு முழுவதுமே பாராட்டியிருக்கும் ஆனால் தமிழன் ஒருவன் வெற்றி பெற்றதன் காரணமாகத்தான் அவனை பாராட்டுவதற்கு இந்த அரசாங்கத்தில் உள்ள எவரும் முன்வரவில்லை.
குறிப்பாக வெற்றிபெற்று சாதனை படைத்தவர் ஒரு பெரும்பான்மை இனத்தினை சேர்ந்தவராக இருந்திருப்பாராயின் அவரை விமானநிலையம் சென்று மலர்மாலை அணிவித்து வேன்ட் வாத்தியத்துடன் பவணியாக அமைச்சர்களே அழைத்துவந்து அவருக்கான முழு பாராட்டினையும் வழங்கியிருப்பார்கள் மாறாக தமிழன் என்ற காரணத்தினால் பாலுராஜ் முற்று முழுதாக இந்த அரசாங்கத்தினால் புறக்கணிக்கப்ட்டார் என்பதுதான் உண்மை.
இந்த நாட்டிலே பல தசாப்த காலங்களாக தமிழர்களுக்கான நிரந்தரத்தீர்வு கிடைக்கவேண்டும் என்று வௌ;வேறான போராட்ட வடிவங்களை முன்னெடுத்து வந்திருக்கின்றோம் அந்த போராட்டங்களுக்கான பெறுபேறுகளை அடையும் காலம் வெகு தொலைவில் இல்லை என்பது இந்த தமிழ்மகன் பெற்றெடுத்த வெற்றிமூலம் நிரூபனமாகியிருக்கின்றது.
ஒரு மனிதன் தன்னைத்தான் காப்பாற்றிக்கொள்வதற்கு கராத்தே மிக முக்கியஇடத்தினை பெறுகின்றது அதனடிப்படையிலேதான் எதிர்வரும் காலங்களிலும் அதற்கான முயற்சியினை இக்கல்லூரி எடுக்கும் பட்சத்தில் அதற்கான முழு ஒத்துழைப்பையும் மாகாணசபை கல்வி அமைச்சரிடம் இருந்து பெற்றுக்கொடுப்பதற்கு தயாராக இருக்கின்றேன் எனவும் கூறினார்.