புதுநகர் ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயத்தின் சித்திரத்தேர் வெள்ளோட்டம் !

(சதீஸ்)
புதுநகர் ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் 7ம் நாள் திருவிழாவாகிய இன்று புதிதாக அமைக்கப்பட்ட சித்திரத்தேர் வெள்ளோட்டமானது இன்று காலை 9.30 மணியளவில் ஆலய வெளிவளாகத்தில் மிகவும் கோலாகலமாக இடம்பெற்றது. 

இவ் வெள்ளோட்டத்தில் பெருமளவிலான பொதுமக்களும் பக்தஅடியார்களும் கலந்துசிறப்பித்தனர். 

இச் சித்திரதேர் சுமார் ரூபா.30 இலட்சம் பெறுமதியில் உருவாக்கப்பட்டது. மேலும் இச்சித்திரைதேரானது 03.07.2014 அன்றுவிநாயகப்பெருமான் எழுந்தருளிவீதி உலாவந்து அருள்பாலிக்கவுள்ளார். 

எனவே எதிர்வரும் இத்தேரோட்ட நிகழ்வில் சகலபக்தஅடியார்களும்; கலந்துசிறப்பிக்குமாறுஅன்புடன் கேட்டுக்கொள்கின்றனர் ஆலயபரிபாலசபையினரும் தேர்க்குழுவினரும்.