மெதடிஸ்த மத்திய கல்லூரிக்கும் புனித மைக்கேல் கல்லூரிக்கும் இடையில் இடம்பெற்ற பாடுமீன்களின் சமரில் மெதடிஸ்த மத்திய கல்லூரி வெற்றி

மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரிக்கும் மட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லூரிக்கும் இடையில் நடாத்தப்படும் 98ஆவது பாடுமீன்களின் சமர் கிரிக்கட் போட்டி  கல்லடி சிவானந்தா தேசிய பாடசாலை மைதானத்தில் நேற்று 05.07.2014 காலை 09.00 மணியளவில் ஆரம்பமானது .

மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் 200வது ஆண்டு நிறைவினை சிறப்பிக்கும் வகையில் இக் கிரிக்கட் போட்டயின்  நிகழ்வுகள் HNB  வங்கி  மற்றும் கல்லூரியின்  பழைய மாணவ சங்க இணை அனுசரணையில் மிக கோலாகலமாக  இடம்பெற்றது .



இன் நிகழ்வுக்கு அதிகளாக மத்திய கல்லூரி அதிபர்  விமல் ராஜ் , மட்டக்களப்பு (கல்வி வலயம் ) பிரதி கல்விப் பணிப்பாளர்  .எம் .குருகுல சிங்கம் , மட்டக்களப்பு மேலதிக அரசாங்க அதிபர்  .எஸ் .கிரிதரன் , மைக்கேல் கல்லூரி அதிபர் திருமதி .மாசிலாமணி ,அருட்தந்தை இரஜீவன் , கல்லூரி பழைய மாணவ சங்க செயலாளர் கோபிநாத் , மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் .எம் .உதயகுமார்  ஆகியோர் கலந்து சிறப்பித்தனர் .

இன்று இடம்பெற்ற பாடுமீன்களின் சமர் கிரிக்கட் போட்டி ஆரம்பிக்கும் முகமாக  இரு கல்லூரிகளின்  அணித்தலைவர்கள் பூவா தலையா போட்டு பார்த்ததில் , மத்திய கல்லூரி இதில் வெற்றி பெற்று  முதலில் துடுப்பெடுத்தாடியது . 50 ஓவர் கொண்ட போட்டியில்  அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 190 ஓட்டங்களை  பெற்றுக்கொண்டது .பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மைக்கேல் கல்லூரி அணி  சகல விக்கட்டுக்களையும் இழந்து 137 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது . நேற்று இடம்பெற்ற 98வது பாடுமீன்களின் சமர் கிரிக்கட் போட்டியில் 53 ஓட்டங்களினால்   மெதடிஸ்த மத்திய கல்லூரி வெற்றி பெற்று , மூன்றாவது முறையாகவும் வெற்றிக்கின்னத்தை சுவிகரித்து ,  பாடுமீன்களின் சமர் கிரிக்கட் வெற்றிக் கிண்ணத்தை மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி  தனதாக்கிகொண்டது.