மட்டக்களப்பில் பிரசித்திபெற்ற ஓந்தாச்சிமடம் ஸ்ரீ வடபத்திரகாளியம்பாள் அலய வருடாந்த மகோற்சவத்தின் இறுதிநாளான இன்று புதன்கிழமை (09) தீமிதிப்பு வைபவம் இடம்பெற்றது.
ஆயிரக்கணக்கான அடியவர்களுடன் தீமிதிப்பில் கலந்து கொண்டு தங்கள் நேர்கடன்களை நிறைவேற்றினர்.
இந்நிகழ்வில் அனுராதபுர பெமடுவ விகாரையில் உள்ள சுமணதிஸ்ச தேரோவும் தீமிதிப்பில் கலந்து கொண்டார்.
வருடாந்த மகோற்சவம் கடந்த செவ்வாய்க்கிழமை ( 01.07.2014) ஆரம்பமானது. உற்சவக் கிரியைகளை விஸ்வப்பிரம்மஸ்ரீ எஸ் சற்குணராஜாக் குருக்கள் தலைமையில் உதவிக் குருமார்கள் நடாத்தினர்












