திருக்கோவில் பிரதேசத்தில் நீண்டகாலமாக கால்நடைகளை விற்பனை செய்துவந்ததாக கூறப்படும் இருவரை வியாழக்கிழமை(17) காலையில்; கைதுசெய்ததுடன் 4 கால்நடைகளை மீட்டுள்ளதாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர்.
திருக்கோவில் 3 பிரிவைச் 43 வயதுடைய நபரும்; தம்பிலுவில் 2 ஆம் பிரிவைச் சேர்ந்த 45 வயதுடைய நபருமே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இப்பிரதேசத்தில் கால்நடைகள் திருடப்படுவதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து பொலிஸ் நிலைய குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் எஸ்.எம்.அமீர் தலைமையிலான பொலிஸார் சோதனைகளை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில், சம்பவதினமான வியாழக்கிழமை காலை (17) கால்நடைகளை திருடி விற்றுவந்த மேற்படி இருவரும் கைதுசெய்யப்பட்டனர்.
கைதானவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.













