நிந்தவூர் 'டயிட்டானிஸ்;' விளையாட்டுக் கழகத்தின் விசேட இப்தார் நிகழ்வு.

 ( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )

நிந்தவூர் 'டயிட்டானிஸ்;' விளையாட்டுக் கழகத்தின் விசேட இப்தார் நிகழ்வு நேற்று  மாலை நிந்தவூர், பிரதான வீதியில் அமைந்துள்ள அதன் காரியாலய கேட்போர் கூடத்தில் மிகச் சிறப்பாக இடம் பெற்றது.

டயிட்டானிஸ்; விளையாட்டுக் கழகத் தலைவர் எம்.சி.எம்.றிபாய் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் இளைஞர் பாராளுமன்ற தகவல், ஊடகத்துறை அமைச்சர் சுலைமான் ஸhபி, மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரீப் சம்சுதீன், நிந்தவூர் பிரதேச சபைத் தலைவர் எம்.ஏ.எம்.தாஹீர், மதீனா மகா வித்தியாலய முதல்வர் எஸ்.அஹமது உள்ளிட்ட உலமாக்கள், கல்விமான்கள், விளையாட்டுக் கழகத் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
சங்கைக்குரிய உலமா சாலிஹீன் மௌலவி அவர்களால் மார்க்க சொற்பொழிவு நிகழ்த்தப்பட்டது.