இலங்கை வங்கியின் செங்கலடி கிளையினரால் உதயன்மூலை விவேகானந்த வித்தியாலய வளாகத்தில் பாரிய சிரமதானம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளத்தினால் அதிகம் பாதிக்கப்படும் சித்தாண்டி உதயன்மூலை பிரதேசத்தில் இன்று டெங்கு ஒழிப்பு சிரமதானமொன்று நடைபெற்றது.


இலங்கை வங்கியின் 75 ஆண்டு பூர்த்திய முன்னிட்டு “டெங்குவை ஒழிப்போம் சுற்றுப்புறச் சூழலை சுத்தமாக வைத்திருப்போம்” எனும் சமூக சேவைத் திட்டத்தின் கீழ் வங்கியின் செங்கலடி கிளையினரால் உதயன்மூலை விவேகானந்த வித்தியாலய வளாகத்தில் பாரிய சிரமதானம் மற்றும் மரம் நடும் நிகழ்வு முகாமையாளர் வி.செகராஜசிங்கம் தலைமையில் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது இலங்கை வங்கியினால் முன்னெடுக்கப்பட்டும் சேமிப்புத் திட்டங்கள் தொடர்பாக மாணவர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டதுடன், பாடசாலை வளாகம் சுத்தமாக்கப்பட்டு, கிணற்றில் நீர் இறைத்து துப்பரவு செய்யப்பட்டது.