வாழைச்சேனை ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான தீ மிதிப்பு

(த.லோகதக்சன்)

வாழைச்சேனை புதுக்குடியிருப்பு அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான மஹோற்சவ பெருவிழாவின் தீ மிதிப்பு மற்றும் தீர்த்தோற்சவம் புதன்கிழமை நடைபெற்றது.

கடந்த 21ம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி பத்து நாட்கள் பெருவிழா இடம்பெற்று திங்கட்கிழமை தீ மிதிப்பு, தீர்த்தோற்சவம் மற்றும் கொடியிறக்கத்துடன் பெருவிழா நிறைவடைந்தது.

ஆலயத்தில் இடம்பெற்ற தீ மிதிப்பு நிகழ்வின் போது பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தங்களுடைய நேர்த்திக் கடன்களை நிறைவேற்றிக் கொண்டனர். பின்னர் தீர்த்தமாடுவதற்கான அம்பாள் ஆலயத்திலிருந்து புற்றப்பட்டு வாழைச்சேனை கைலாயப்பிள்ளையார் ஆலயம், பேத்தாழை வீரையடி விநாயகர் ஆலயம் மற்றும்  பேத்தாழை ஆலையடி பிள்ளையார் ஆலயம் என்பவற்றின் பூசைகள் இடம்பெற்று பாசிக்குடா கடற்கரைக்கு சென்று அங்கு தீர்த்தமாடப்பட்டு பின்னர் ஆலயத்தினை சென்றடைந்தது.

பூசைகள் முடிவுற்றதும் ஆலயத்தில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கி வைக்கப்பட்டது.

மஹோற்சவ பூசைகள் யாவும் தென் ஆபிக்கா ஸ்ரீ நிவாஸ பெருமாள் தேவஸ்தான பிரதம குரு பிரதிஷ்டா கிரியா ரத்னம் பிரம்மஸ்ரீ.பா.பாலசுந்தரக் குருக்கள் தலைமையில் ஏனைய குருக்கள் சகிதம் நடைபெற்றது.