(சித்தா)
கிழக்கு மாகாண கல்வித் திணைக்களம் வலய ரீதியாக ஆரம்பக் கல்வி மாணவர்களுக்கான கணித> மொழித் திறன் முகாம்களை ஒழுங்கு செய்து நடாத்தி வருகின்றது. இந்த வகையில் கல்குடா கல்வி வலயத்தில் ஆரம்பக் கல்வி மாணவர்களுக்கான கணித, மொழித் திறன் முகாம்கள் இன்று 19.07.2014 மட்/செங்கலடி மத்திய கல்லூரியில் கல்குடா வலய ஆரம்பக் கல்வி இணைப்பாளர் திரு.கே.யோகராசா அவர்களின் ஒழுங்கமைப்பின் கீழ் நடைபெற்றது. இம் முகாமில் சுமார் 600 ஆரம்பப் பிரிவு மாணவர்களும் ஆரம்பக் கல்வி ஆசிரியர்களும் பெற்றார்களும் பங்குபற்றியிருந்தனர் இம் முகாமினை கிழக்கு மாகாண கல்வித் திணைக்கள ஆரம்பக் கல்விப் பிரிவு உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு .பூ.உதயகுமார் நேரடியாகச் சென்று முகாமினை பார்வையிட்டார்












