கல்விச் சேவை ஊழியர்களின் கூட்டுறவுச் சங்கத்தின் நடாமடும் சேவை

(சதீஸ்)
மட்டக்களப்பு மாவட்டத்திற்க கல்விச் சேவை ஊழியர்களின் கூட்டுறவுச் சங்கத்தின்  நடமாடும் சேவை நேற்று 5ம் திகதி சனிக்கிழமை காலை மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் ஆரம்பித்து வைக்கப்பட்டதாக அதன் முகாமையாளர் ஏ.எம்.கே.பி. அத்தபத்து தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள கல்வி நிறுவனங்களில் சேவையாற்றும் கல்விச் சேவை ஊழியர்களின் கூட்டுறவுச் சிக்கன கடனுதவிச் சங்கத்தின்  (Education Employees cooperative Thrift and Credit Society) அங்கத்தவர்களுக்காக இச்சேவை நடாத்தப்படுவதாக அவர் தெரிவித்தார்.

நேற்று சனிக்கிழமை அராம்பமான இந் நடமாடும்சேவை இன்று ஞாயிற்றுக்கிழமை காலை ஒன்பது மணி முதல் மாலை நான்கு மணிவரை இடம்பெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்விச் சேவை ஊழியர்களின் கூட்டுறவுச் சிக்கன கடனுதவிச் சங்கத்தின் பொதுச் செயலாளர் காமினி குணத்திலக்க, பிரதிப் பொதுமுகாமையாளர் சீ.பீ.டீ.எஸ். விதாரண, உதவிப் பொதுமுகாமையாளர் லக்மினி ஜயஸ்ரீவர்தன உட்பட சங்கத்தின் அதிகாரிகள் 31 பேர் இச் சேவையில் பங்கேற்கின்றனர்.

இதன்போது கல்விச் சேவை ஊழியர்களின் கூட்டுறவுச் சிக்கன கடனுதவிச் சங்கத்தில் அங்கத்துவத்தைப் பெற்றுக் கொள்ளல், விஷேட மற்றும் நிரந்தர வைப்புக்களிலிருந்து பணம் மீளப் பெற்றுக் கொள்ளல், நிரந்தர வைப்புப் பணத்தை பிணையாக வைத்து கடன் பெற்றுக் கொள்ளல் ரூபாய் 60 ஆயிரம் வரை கடன் தொகையை இச் சேவை மூலமாக பெற்றுக் கொள்ளல், ரூபா.150000.00 வரை பிணைக்கடன் பெற விண்ணப்பத்தைப் பெற்றுக் கொள்ளல் போன்ற சேவைகளை இதன் மூலம் வழங்கப்படுகின்றது.