தோப்பூர் இலங்கை வங்கி கிளையின் டெங்கு ஒழிப்பு சிரமதானம்.

( ரவிப்ரியா )
இலங்கை வங்கியின் 75வது ஆண்டு நிறைவை முன்னிட்டு கிழக்குப் பிராந்திய உதவிப் பொது முகாமையாளர் கே.பி.ஆனந்தநடேசன் வழிகாட்டலில், தோப்பூர் இலங்கை வங்கி கிளையினர் டெங்கு ஒழிப்பு சிரமதானம் ஒன்றை பட்டித்திடல் மகா வித்தியாலயத்தில் 2014.07.05
சனிக்கிழமை மேற்கொண்டனர்.

பாடசாலை மாணவர்கள், அதிபர் ஆசிரியர்கள் பெற்றோர் வங்கி உத்தியோகத்தர்கள் ஆகியோர் இணைந்து இச் சிரமதானத்தை மேற் கொண்டனர். இதில் கிராமசேவை உத்தியோகத்தர். பொது சுகாதாரப் பரிசோதகர் ஆகியோரும் கலந்து கொண்டு ஒத்துழைப்பு அளித்தனர்.