அரசியல் என்பது அபிவிருத்தி மட்டுமல்ல சிலர் அபிவிருத்திதான் அரசியல் என்று நினைக்கின்றார்கள் அரசியலில் ஒரு பகுதிதான் அபிவிருத்தி பல்லின சமூகம் வாழும் ஒரு நாட்டில் அந்த நாட்டில் இருக்கும் பெரும்பான்மை சமூகத்தினரால் தமது
பெரும்பான்மையைக்கொண்ட அரசாங்கத்திடம் அந்த நாட்டிற்குள் வாழும் சிறுபான்மை இனம் புறக்கணிக்கப்படுமானால் அந்த இனம் அரசியல் உரிமையினை பெற போராட்டம் நடத்துவது அவர்களது உரிமை என த.தே.கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் கூறினார்.
தாண்டியடியில் கட்சி ஆதரவாளர்களுடனான மக்கள் சந்திப்பில் கழந்து கொண்டு உரையாற்றும்போதே இதனைத்தெரிவித்தார்.
இங்கு மேலும் கருத்துரைக்கையில்
பாதிக்கப்பட்ட சிறுபான்மை இன மக்களின் உரிமையைப்பெறுவதற்காகத்தான் தந்தை செல்வா 1949ஆம் ஆண்டு தொடக்கம் வடகிழக்கில் தமக்கான உரிமையைப்பெறும் போராட்டத்தினை நடத்திக்கொண்டிருந்தார் இப்போராட்டத்தின்போது சமஸ்டி கோரிக்கையைத்தான் முன்வைத்தார். அதனை உதாசீனம் செய்ததன் காரணமாகத்தான் 1976.05.14ஆம் திகதி சுதந்திர தமிழீழ அரசு நிறுவுவதற்கான தீர்மானம் வட்டுக்கோட்டையில் எடுக்கப்பட்டது.
அதற்குப்பின்னர்தான் தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தி போராடியாவது எமது தமிழீழ அரசை நிறுவ வேண்டும் என போராட்டத்தில் குதித்தார்கள். ஆனால் இன்று 65 வருடங்களாக உரிமைப்போராட்டம் இடம்பெற்று தற்போது சம்மந்தன் ஐயா தலமையில் இப்போது போராட்டம் இடம்பெற்றுக்கnhண்டிருக்கின்றது.
இலங்கை சுகந்திரம் அடைந்த காலம் தொட்டு தமிழ்மக்களுக்கான நிரந்தரத்தீர்வு கிடைத்திருந்தால் நாங்கள் விடுதலை வேண்டி போராடவேண்டிய தேவை ஏற்பட்டிருக்காது ஆனால் தற்போது சிலர் கூறுகின்றார்கள் அபிவிருத்திக்காகவேண்டி தமிழ்மக்கள் போராடிக்கொண்டிருக்கின்றார்கள் என்றும் அமைச்சர்களாக இருந்தால்த்தான் எதனையும் பெறமுடியும் என்ற தப்பான கருத்துக்களை கூறிவருகின்றார்கள்.
தமிழ்மக்களாகிய நாங்கள் ஒன்றைமாத்திரம் சிந்திக்கவேண்டும் அபிவிருத்திதான் எங்கள் இலக்காக இருக்குமாக இருந்தால் வடகிழக்கு தமிழர்களின் தாயகம் என்பது இல்லாமல் போயிருக்கும் 65 வருடங்களாக உரிமையற்று இருக்கும் நாங்கள் இந்த அரசாங்கத்தில் பல்வேறு போராட்டங்களை நடத்தியும் பாரிய இழப்புக்களை இழந்தும், இலட்சக்கணக்கான உயிர்களை பலிகொடுத்தும் இருக்கின்றோம்.
வெறுமனே அற்பசொற்ப சலுகைகளுக்காக சோரம் போவோமாக இருந்தால் தமிழ்மக்களின் அடையாளங்கள் இருந்த இடமே தெரியாமல் போய்விடும் இலங்கையில் பதிவு செய்யப்பட்ட 65 அரசியல்கட்சிகள் இருக்கின்றன இதில் த.தே.கூட்டமைப்பினர் மாத்திரம்தான் தமிழ்மக்களுக்கான இனம் சார்ந்த விடுதலையை பெறுவதற்கு போராடிக்கொண்டிருக்கின்றோம் நாங்களும் இதனை கைவிடுவேமாக இருந்தால் தமிழ்மக்களின் உரிமை என்ற விடயம் இல்லாமல் போய்விடும்.
இதற்காகத்தான் தற்போது இருக்கும் அரசு வடக்கு கிழக்கில் இருக்கும் தமிழ்மக்களுக்குள்ளே தமிழ்த்தேசியக் கொள்கையில் இருந்து தமிழர்களை திசை திருப்புவதற்காக பலரை இறக்கிவிட்டிருக்கின்றார்கள் அதில் அமைச்சர்கள் என்று அபிவிருத்தி செய்கின்றவர்களும் அமைப்பாளர்கள் என்ற பெயரில் ஊதுகுழலாய் பிரச்சாரம் செய்கின்றவர்களும் புலனாய்வாரள்கள் என்ற பெயரில் தமிழ்த்தேசியத்திற்காக உழைப்பவர்களை ஒருவகையில் அச்சுருத்தி மிரட்டும் நடவடிக்கையிலும் இறங்கியிருக்கின்றார்கள்.
சர்வதேச மயப்படுத்தப்பட்ட விடுதலைப்போராட்டத்தினை அடையும் வரை தமிழ் மக்கள் தமிழத்தேசியக்கூட்டமைப்பினரை பலப்படுத்த வேண்டும் அவ்வாறு பலப்படுத்தாமல் இருப்பார்களாக இருந்தால் தமிழ்மக்களின் இருப்பு என்பது எதிர்காலத்தில் இல்லாமல் போகும் வாய்ப்பும் ஏற்படும்.
இந்த உண்மை நிலையை தமிழர்களாக இருக்கும் புத்திஜீவிகளும், கல்வி மான்களும், அரச உத்தியோகஸ்த்தர்களும், அதிபர்கள், ஆசிரியர்கள், மதப்பெரியார்கள் என அனைவரும் இதனை விளங்கிக்கொண்டு ஏதோ ஒரு வகையில் த.தே.கூட்டமைப்பை பலப்படுத்துவதற்கான வேலைத்திட்டத்தில் இறங்கி தமிழ்களினது அடையாளங்கள், பண்பாடுகளையும் காப்பாற்ற அனைவரும் முன்வரவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.