(ரேவநிசாந் )
பத்தினி தெய்வ வழிபாட்டில் சிறப்புற்று விளங்கும் மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முணை தென்எருவில்பற்று பிரதேச செயலகபிரிவிக்குட்பட்ட மகிழூர்முனை 110வீ கிராமத்தில் வங்கக்கடல் அலையோசை வரவேற்று நிற்க வாவிமகள் முத்திசையும் சூழ்ந்து எழில் பரப்ப சேற்றினிலே வெண் தாமரை செங்கதிரோனை வரவேற்று நிற்க ஏர் புரண்டு விளையாடி ஏற்றம் தரும் நெல்மணிகள் விளையூராம் மகிழூர்முனை மண்டபத்தடி பதியினிலே அமர்ந்திருந்து அருள் வழங்கி கொண்டிருக்கும் அன்னை முத்துமாரி அம்பாளுக்கு வருடாந்த திருச்சடங்கு விழா 06.07.2014 ஞாயிற்றுக்கிழமை திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாகி 12.07.2014 சனிக்கிழமை அதிகாலை அன்று தீ மிதிப்பு இடம்பெற்று கன்னிமார்களுக்கான அன்ன பூசையினை தொடர்ந்து மாரியம்மன் கும்பம் சொரிந்து தீர்த்தமாடுதலுடன் உற்சவம் இனிதே நிறைவடைய இருக்கின்றது. எமது திருச்சடங்கு நிகழ்வுகள் நேரடியாக எமது உத்தியோகபூர்வ இணையத்தளமான http://www.kovil110b.blogspot.com என்ற இணையத்தளத்தில் ஒளிபரப்பாக இருக்கின்றது. எனவே இத்திருச்சடங்கு காலத்தில் அனைவரும் வருக அம்மன் அருள் பெறுக!
. .
அதிகம் வாசிக்கப்பட்டவை - 7 நாட்கள்
LATEST NEWS
10/recent/recentPost
குற்றம் - CRIME NEWS
6/crime/block_4














