காரைதீவு சந்தியில் புதிதாக அமைக்கவுள்ள சுவாமி விபுலானந்தரின் உருவ சிலைக்கான பூமி பூசை நிகழ்வு

(சித்தாண்டி நித்தி) காரைதீவு சந்தியில் சுவாமி விபுலானந்தரின் உருவ சிலை  அமைப்பதற்கான பூமி பூசை காரைதீவு மகா விஸ்ணு ஆலய குருக்களின் தலைமையில் கடந்த 27.06.2014 திகதி நடைபெற்றன. 








கடந்த காலங்களில் இருந்து காரைதீவு சந்தியில் சுவாமியின் சிலை அமைப்பதற்கான ஆலோசனை மற்றும் வழிகாட்டல் புஸ்பா பொருளாதார கல்வி சமூக அபிவிருத்தி அமைப்பின் ஸ்தாபகர் செல்லையா இராசையா அவர்களின் தலைமையின் கீழ் நடைபெற்றதுடன் சிலை நிறுவுதற்கான அனைத்து வேலைகளும் நிறைவடைந்த நிலையில் இப்பூமி பூசை  நிகழ்வு நடைபெற்றன. இதன்போது வெகுவிரைவில் சந்தியில் சுவாமி விபுலானந்தரின் உருவ சிலை அமையவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.