களுமுந்தன்வெளியில் சாதனையாளர் பாராட்டு விழா

(சக்தி)   


மட்.களுமுந்தன்வெளி விநாயகர் கலைக் கழகத்தின் வருடாந்த சாதனையாளர் பாராட்டு விழா களுமுந்தன்வெளி விநாயகர் கலையரங்கில் இடம்பெற்றது.

களுமுந்தன்வெளி விநாயகர் கலைக் கழகத்தின் தலைவர் மு.சவுந்தரராசன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான மா.நடராசா, ஞா.கிருஷ்ணபிள்ளை, மற்றும் கிராம பெரியோர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.


இதன்போது கடந்த 2013 ஆம் ஆண்டு மட்.களுமுந்தன்வெளி அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் கற்று கல்வி பொதுத் தரத்தில் சித்தியடைந்து உயர்தரத்திற்குத் தெரிவாகிய 10 மாணவர்களுக்கும், பாசாலை மட்டத்தில் மாகாண மட்ட விளையாட்டுப் போட்டியில் பங்கு பற்றிய 3 மாணவர்களுக்கும். பரிசில்களும் பதக்கங்களும் வழங்கப்பட்டன.

இந்நிலையில் களுமுந்தன்வெளி விநாயகர் விளையாட்டுக் கழகத்திலிருந்து பிரதேச மட்டம் மாவட்ட மட்டம் ஆகியவற்றில் இவ்வருடம் (2014) பங்கு பற்றி வெற்றியீட்டிய 30 வீர வீராங்கணைகளுக்கும் சான்றிதழ்களும் பரிசில்களும் வழங்கப்பட்டன.

இதன்போது களுமுந்தன்வெளி கிராம அபிவிருத்திக்காக உழைத்து வரும் தெரிவு செய்யப்பட்ட 5 பெரியோர்களுக்கும் வாழ்த்துப்பா வழங்கி, பொன்னாடை போர்திக் களுமுந்தன்வெளி விநாயகர் கலைக் கழகத்தினால் கௌரவிக்கப் பட்டமை குறிப்பிடத் தக்கதாகும்.