ஜோன் கீல்ஸ் குழு - யூனியன் அஷ்யூரன்ஸ் ஏற்பாட்டில் இலவச மருத்துவமுகாம்

ஜோன் கீல்ஸ் குழு - யூனியன் அஷ்யூரன்ஸ் நிறுவனங்களின் அனுசரணையுடன் வெருகல் பிரதேசத்தில் கண் பார்வைகுறைந்தோருக்கான இலவச மருத்துவ முகாம் அண்மையில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் கண் பார்வையற்றோருக்கு இலவசமாக வைத்தியரின் பரிசோதனைக்கமைவாக மூக்குக் கண்ணாடிகள் வழங்கிவைக்கப்பட்டதுடன் கண் பார்வை பெற சத்திர சிகிச்சை செய்யவேன்டியவர்களுக்கு மருத்துவரின் பரிசோதனைக்கமைவாக இலவசமாக சத்திரசிகிச்சை செய்வதற்கு திகதியும் வழங்கப்பட்டது.

இம் மருத்துவ முகாமிற்கு 239 நோயாளர்கள் வருகைதந்து பயன்களைப் பெற்றுக்கொண்டனர்.

யூனியன் அஷ்யூரன்ஸ் கிழக்கு வலய முகாமையாளர் எம்.ஜெகவண்ணன் அவர்களின் தலைமையில் இந் நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது, வெருகல் பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் செல்வி.ஆனந்தராஜா லதுமீரா , பிரதேச வைத்திய அதிகாரி H.K.A.ஹளபதி, யூனியன் அஷ்யூரன்ஸ் கிழக்கு பிராந்திய ஆட்சேர்ப்பு முகாமையாளர் அ.நிரோசன்,  யூனியன் அஷ்யூரன்ஸ் கிழக்கு மாகாண இணைப்பாளர் கெனற்ட் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், சுகாதார அலுவலக உத்தியோகத்தர்கள் .என பலர் கலந்துகொண்டனர்.