தமிழர்களுக்கெதிரான இனப்படுகொலை இடம் பெற்ற போது அரசிலிருந்த முஸ்லிம் காங்கிரஸ் கண்டும் காணாமலும் இருந்தது


தமிழ் மக்­க­ளுக்கு எதி­ராக இனப்­படு­ கொலை இடம்­பெற்ற காலத்தில் அதனை கண்டும் காணா­மலும் அர­சாங்­கத்­துடன் ஒட்­டிக்­கொண்டு இருந்­த­வர்­கள்தான் முஸ்லிம் காங்­கி­ரஸில் உள்ள அமைச்­சர்­களும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் என கல்­முனை மாந­கர சபை எதிர்க்­கட்சி தலைவர் அ. அமிர்­த­லிங்கம் கூறினார்.

முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக இந்த நாட்­டிலே அண்­மைக்­கா­ல­மாக இடம்­பெறும் சம்­ப­வங்கள் தொடர்­பாக கண்­டன தீர்­மானம் ஒன்று கல்­முனை மாந­கர முதல்­வ­ரினால் முன்­வைக்­கப்­பட்­டது. இத்­தீர்­மா­னத்­திற்கு ஆத­ர­வ­ளித்து பேசு­கை­யி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் கூறு­கையில்,
1977, 83, 90 ஆம் ஆண்டு காலப்­ப­கு­தியில் தமிழ் மக்­க­ளுக்கு எதி­ராக இந்த நாட்­டிலே மாறி­மாறி ஆட்­சிப்­பீடம் ஏறிய இரண்டு அர­சாங்­கங்­களும் செயற்­பட்­டன.
தமி­ழர்­களின் சொத்தை சூறை­யா­டியும் உ.ைட­மை­க­ளையும் நாசம் செய்தும் அவர்­களை ஏதி­லி­யாக்­கி­யுதும் தான் இந்த இரண்டு அர­சாங்­கங்­களும் தமிழ் மக்­க­ளுக்கு செய்த கைங்­க­ரி­ய­மாகும். இந்த நேரத்தில் கூட முஸ்லிம் காங்­கிரஸ் அந்த அர­சாங்­கங்­க­ளு­டன்தான் ஒட்­டிக்­கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்­தது. அது­பற்றி அவர்கள் எங்­கா­வது கதைத்­ததும் இல்லை. அதனை எண்­ணிப்­பார்த்­ததும் இல்லை.
ஆனால் பாதிக்­கப்­பட்ட சிறு­பான்மை இனம் என்ற ரீதியில் நாங்கள் கைகட்டி வாய்­மூடி மௌனி­க­ளாக இருந்­ததும் இல்லை. இனிமேல் இருக்­கப்­போ­வ­து­மில்லை. எங்­க­ளுக்கு ஏற்­பட்ட வலி எங்­க­ளுக்கு நன்­றாக புரியும். அந்த வலி­யினை இன்­னு­மொரு சிறு­பான்மை இனம் பட வேண்டும் என்று நாங்கள் விரும்­ப­மாட்டோம்.
1972ஆம் ஆண்டு புத்­த­ளத்தில் உள்ள முஸ்­லிம்கள் சுட்­டுக்­கொல்­லப்­பட்ட போது தமி­ழ­ரசு கட்­சியின் தலைவர் தந்தை செல்வா பாரா­ளு­மன்­றத்­திலே அதற்கு எதி­ராக குரல் கொடுத்­தவர் என்­பதை அனை­வரும் அறிந்­தி­ருப்­பார்கள்.
அவ்­வா­றுதான் எமது கட்சி அன்­றி­லி­ருந்து இன்று வரைக்கும் செயற்­பட்­டுக்­கொண்டு வரு­கின்­றது. அதே­போன்­றுதான் இனி­வரும் காலங்­க­ளிலும் செயற்­படும் என்­பதில் எந்த சந்தேகமும் இல்லை.
கல்முனை மாநகர சபையைப் பொறுத்த வரையில் தமிழ், முஸ்லிம் ஆகிய இரண்டு சமூகங்களும் ஐக்கியமாக இருந்து செயற்பட வேண்டும். அதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.