( ரவிப்ரியா )
பட்டிருப்பு கல்வி வலயத்திலுள்ள கண்ணகிபுரம் விநாயகர் வித்தியாலத்திற்கு 5.6 மில்லியன் ரூபா செலவில் மாடிக் கட்டடம் ஒன்று அமைப்பதற்காக அடிக்கல் நாட்டும் விழா 18ந் திகதி வெள்ளிக்கிழமை
பாடசாலை அதிபர் க.பிரபாகரன் தலைமையில் வெகு விமரிசையாக நடைபெற்றது. பிரதம விருந்தினர்களாக கிழக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள், காணி, காணி அபிவிருத்தி, போக்குவரத்து அமைச்சர் விமலவீர தி~hநாயக்க, மீள்குடியேற்றப் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், மாகாண முன்னாள் முதலமைச்சரும், மாகாணசபை உறுப்பினரும், ஜனாதிபதியின் ஆலோசகருமான சி.சந்திரகாந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
விசேட அதிதிகளாக பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி ந.புள்ளநாயகம,; மண்முனை தென் எருவில் பிரதேச செயலக பிரதேச செயலாளர் மூ.கோபாலரெட்ணம், வைத்திய அத்தியட்சகர் டாக்டர் கு.சுகுணன், ஆகியோரும், சிறப்பு அதிதிகளாக முன்னாள் மாகாணசபை உறுப்பினர் பூ.பிரசாந்தன், பிரதிக்கல்விப் பணிப்பாளர்களான மா.உலகேஸ்பரம், மற்றும் தா.நித்தியானந்தன், மாவட்ட பொறியியலாளர் ஆர்.கிருஸ்ணதாசன், பாடசாலை வேலைகள் பரிசோதகர் த.இராசநாயகம் ஆகியோரும், கௌரவ அதிதிகளாக கோட்ட கல்வி பணிப்பாளர் வி.திரவியராஜா, பாடசாலை மேம்பாட்டுத் திட்ட இணைப்பாளர் எஸ்.யோகராசா ஆகியோரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
அதிதிகள் வரவேற்று அழைத்துவரப்பட்டு, பிரதம அதிதிகளால் தேசிய, மாகாண, வலய. பாடசாலை கொடிகள் ஏற்றப்பட்டு, தேசியகீதம் இசைக்கப்பட்டு. பொங்கல் படைத்து, பிரதம அதிதிகள் மூவரும் ஒன்றிணைந்து, அடிக்கல் நாட்டலை ஆரம்பித்து வைத்தனர். அதனைத் தொடர்ந்து ஏனைய அதிதிகளும் இவ் வைபவத்தில் இணைந்து கொண்டனர்.
அடிக்கல் நட்டல் நிறைவுக்கு வந்ததும். பாடசாலை மண்டபத்தில் மங்கல விளக்கேற்றலுடன் கூட்டம் ஆரம்பமானது.; பிரதம அதிதிகள் உரையைத் தொடர்ந்து விழா நிறைவு பெற்றது.
இவ்விழாவிற்கு முன்னாள் முதலமைச்சரும், மீள்குடியேற்றப் பிரதி அமைச்சரும் நீண்ட காலத்தின் பின், இணைந்து வந்தமையானது அனைவரையும் கவர்ந்துள்ளது. இது நல்லதொரு திருப்பம் என்றே பொதுமக்கள் கருதுகின்றனர். அதேபோல் இருவரும் உரையாற்றும்போது ஆளுக்காள் ஒருவர் கருத்தை மற்றவர் சாதகமான முறையில் மேற்கோள்காட்டி பேசியமையும் ஆரோக்கியமான நாகரீகமான அரசியல் மாற்றத்தின் ஆரம்பம் என்றே பொதுமக்கள் அகமகிழ்கின்றனர். இதுபோல் அனைத்து தமிழ் அரசியல் தரப்பினரும் தமிழ் மக்களுக்காக ஒன்றிணைந்து வேற்றுமைகளை மறந்து மாவட்டத்தை முதன்மைப் படுத்தி செயற்பட வேண்டுமென்பதே மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கின்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் அரசியல் பலத்தை அதிகரிக்க வேண்டும், அதனால் மாவட்டத்தை கல்வியிலும், பொருளாதாரத்திலும்; உச்ச நிலையை அடையச் செய்ய வேண்டுமென்ற அறைகூவல் பிரதியமைச்சராலும், முன்னாள் முதலமைச்சராலும் விடுக்கப்பட்டதும் இங்கு குறிப்பிடத்தக்கது.




















































