கோப்பாவெளி பாடசாலை மாணவர்களுக்கு சேவகம் நிறுவனம் உதவி!

(சித்தாண்டிநித்தி) மட்டக்களப்பு கோப்பாவெளி, வெளிக்காகண்டி பாடசாலை மாணவர்களுக்கு சேவகம் நிறுவனத்தினால் இன்று பாடசாலை உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டது.

சேவகம் நிறுவனத்தின் 'மாணவர்களுக்கு கைகொடுப்போம்' என்ற நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் இன்றைய தினம் (31.07.2014) மட்டக்களப்பு கோப்பாவெளி அ.த.க. பாடசாலை, வெலிக்காகண்டி விபுலானந்தர் வித்தியாலயங்களில் கல்வி கற்கும் அனைத்து மாணவர்களுக்குமான புத்தகப்பை, அப்பியாசக்கொப்பிகள், தண்ணீர் போத்தல்கள், கலர்பெட்டிகள் எனப் பல பாடசாலை உபகரணங்களை வழங்கிவைத்தனர்.

லண்டன் கிறிஸ்தவ தேவாலயத்தின் ((New Grace Ministries International,Mitcham,Surrey UK) உதவியில் நடைபெற்ற இன் நிகழ்வில் ஏறாவூர் பற்று பிரதேச செயலகத்தின் உதவிப் பிரதேச செயலாளர் திருமதி.முகுந்தன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டு மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்களை வழங்கிவைத்ததுடன் உதவிகளை வழங்கிய சேவகம் நிறுவனம் மற்றும் லண்டன் கிறிஸ்தவ தேவாலய நிர்வாகத்தினருக்கு தனது நன்றிகளையும் தெரிவித்தார்.
மேற்படி நிகழ்வில் ஏறாவூர் பற்று பிரதேச செயலகத்தின் உதவிப் பிரதேச செயலாளர் திருமதி.முகுந்தன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு சிறப்பித்ததுடன் சேவகம் நிறுவனத்தின் தலைவர் எஸ்.நிலாந்தன் அவர்களும், சேவகம் நிறுவனத்தின் இணைப்பாளர் திரு.ந.நித்தியானந்தன் அவர்களும், கோப்பாவெளி,வெளிக்காகண்டி அபிவிருத்தி உத்தியோகத்தர் பிரதீபன் அவர்களும், கோப்பாவெளி கிராமசேவை உத்தியோகத்தர் மற்றும் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் எனப் பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.