(அனாசமி)அக்கரைப்பற்று கல்வி வலயத்திலுள்ள அட்டாளைச்சேனை கோட்டப் பாடசாலையான பாலமுனை இப்னுஸீனா ஜூனியர் கல்லூரியில் மாபெரும் கல்விக் கண்காட்சி அண்மையில் இடம்பெற்றது. இந் நிகழ்வுகளில் அக்கரைப்பற்று வலயக் கல்வி பணிப்பாளர் ஏ.எல்.எம். காசீம் பிரதம அதிதியாகவும், விசேட அதிதியாக அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ. அன்சில் மற்றும் அட்டாளைச்சேனைக் கோட்டக் கல்வியதிகாரி எம்ஏ.சி. கஸ்ஸாலி, உதவிக் கல்விப்பணிப்பாளர் பீ.எம்.அபுல்ஹஸன், ஆசிரிய ஆலோசகர் என். சம்சுதீன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
பாடசாலையின் அதிபர் எஸ்.எம். சாஹிர் ஹூசைன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வின்போது பாடசாலை ஆசிரியர்களது வழிகாட்டலில் மாணவர்களினது ஆக்கங்கள் நிறைந்த கட்காட்சிக் கூடமும், பாடசாலை மாணவர்களின் கற்றலுக்குதவும் வகையில் அமையப்பெற்றுள்ள மூலிகைத்தோட்டமும் திறந்து வைக்கப்பட்டன. இதன்போது ஆங்கில மொழியினை மேம்படுத்தும் வகையில் அமையப்பெற்றிருந்த விசேட கூடம் அனைவரினதும் கவனத்தை ஈர்ந்திருந்தது. இப்பாடசாலையின் ஆங்கில ஆசிரியரான எப்.எம். நசீல் இதனை வடிவமைத்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். அதன் போது அதிதிகள் பார்வையிடுவதையும் படங்களில் காணலாம்.


.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)










