புதுநகர் ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் கடந்த மாதம் 25ம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி , நேற்று மாலை தேரோட்டம் இடம்பெற்றது.
நேற்றயதினம் இடம்பெற்ற 9ம் நாள் திருவிழாவில் தோரோட்டம் மிக சிறப்பாக இடம்பெற்றது.
இவ் மகோற்சவ பூசை நிகழ்வுகள் ஆலய உற்சவ பிரதம குரு கிரியாமணி பிரதிஸ்டா திலகம், சிவாச்சாரியார் சிவஸ்ரீ சு.கு.வினாயகமூர்த்தி குருக்கள் அவர்களினால் இடம்பெற்றது.மேலும் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ.ச.சபாரெத்தினம் குருக்கள் அவர்களும் இப் பூசை நிகழ்வுகளை நடாத்தினார்.
நேற்று மாலை இடம்பெற்ற தோரோட்ட நிகழ்வில் பெருமளவிலான பக்தர்கள் கலந்துகொண்டு வடம்பிடித்து தேரினை இழுத்துச்சென்றதனைக் காணக்கூடியதாக இருந்தது.
உற்சவ இறுதிநாளான இன்று தீர்த்தோற்சவம் இடம்பெறும்.












