Video - சிறுபோக நெல் அறுவடை விழா

(சக்தி & வரதன் )  

மட்டக்களப்பு மவாட்டத்தின் மண்டூர் கமநல கேந்திர நிலையம் ஏற்பாடு செய்திருந்த சிறுபோக நெல் அறுவடை  விழா நேற்று சனிக்கிழமை (19) ஆனைகட்டியவெளி வயற் கண்டத்தில் இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் என்.சிவலிங்கம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இவ் வைபவத்தில், மீள் குடியேற்றப் பிரதிய அமைச்சர் விநாயகமூரத்தி முரளிதரன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு அறுவடையினை ஆரம்பித்து வைத்தார்.


மேலும் இந்நிகழ்வில் மட்டக்களப்பு மவாட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன், கிழக்கு மாகாண விவசாயத்தி திணைக்களத்தின், மட்டக்களப்பு மாவட்டத்திற்குரிய உதவிப் பணிப்பாளர், ஆர் கோகுலதாசன், போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் என்.வில்வரெத்தினம், மீள் குடியேற்றப் பிரதிய அமைச்சரின் இணைப்பச் செயலாளர்கள், மற்றும் விவசாயிகள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

இப்பிரதேசத்தில் 2000 ஏக்கர் வயல் நிலத்தில் ஆற்றலிருந்து மேலதிகமாக வெளியேறும் நீரினைப் பயன்படுத்தி சிறுபோக வேளாண்மை செய்கை பண்ணப் பட்டுள்ளதாக மண்டூர் கமநல கேந்திர நிலையம் தெரிவிக்கின்றது.