யோகேஸ்வரன் எம்.பியின் தந்தை இன்று காலமானார்

(ரவி )
(த.லோகதச்சன்)

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரனின் தந்தையான வாழைச்சேனை புதுக்குடியிருப்பில் வசிக்கும் இரத்தினம் சீனித்தம்பி என்பவர் 89 வயதில் இன்று திங்கட்கிழமை மாலை 4.00 மணியளவில் காலமானார்.

இவர் காலஞ்சென்ற இரத்தினம் இராசம்மா தம்பதிகளின் மகனும், நாகரெத்தினத்தின் கணவரும், காலஞ்சென்ற பூமணி, வாழைச்சேனை காகித ஆலை முன்னாள் தட்டெழுத்தாளர் மகேஸ்வரி, கல்குடா வலய உதவிக் கல்விப் பணிப்பாளரும், வாழைச்சேனை பிரதேச இணக்க பை தவிசாளருமான லோகேஸ்வரி, காயான்கேணி சரஸ்வதி வித்தியாலய அதிபர் காளிதாசன், மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான யோகேஸ்வரன், வாழைச்சேனை இந்துக்கல்லூரி ஆசிரியர் நாகராசா, மட்டக்களப்பு வின்சன் மகளீர் தேசிய பாடசாலை ஆசிரியை சந்திரவதனி ஆகியோரின் தந்தையுமாவார்.

இவரது பூதவுடல் வாழைச்சேனை புதுக்குடியிருப்பிலுள்ள இல்லத்தில் வைக்கப்பட்டு நாளை செவ்வாய்கிழமை மாலை 3.00 மணியளவில் வாழைச்சேனை இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

தகவல்: சீ.யோகேஸ்வரன் (பா.உ), 0776034559, yoheswaran.mp@gmail.com