(சதீஸ்)
'பின்தாங்கிய பிரதேசங்கள் உயர்வு காண்பெதென்றால் கல்வியிலே நாம் முன்னேற்றத்தை காணவேன்டும். இந்த வலயத்தில் இருக்கின்ற கல்வி அதிகாரிகள்அந்த வேலையை செய்து கொண்டிருக்கின்றார்கள் என நான் நம்புகின்றேன்'.
என தழிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா தெரிவித்தார்.
கடந்த 19ம் திகதி வவுணதீவில் இடம்பெற்ற விளையாட்டு நிகழ்வில் அதிதியாக கலந்துகொண்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்
அவர் மேலும் பேசுகையில்,
'எமது பிரதேசம் தற்போது கல்வியில் ஓரளவு தாக்கம் ஏற்பட்டுள்ளதனை நாம் காண்கின்றேம்.
இந்தப் பிரதேசம் புதிதாக அமைக்கப்பட்ட மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தின் நிருவாகத்திலே அமைந்திருக்கின்றது,
இங்கு வருகை தந்த பிரதிக் கல்விப் பணிப்பாளரிடம் நான் கலந்துரையாடியதன்படி இந்த வலயத்தில் கல்வியில் முன்னேற்றத்தினை ஏற்படுத்துவதற்கு சில நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதாக தெரிவித்தார்.
பின்தாங்கிய பிரதேசங்கள் உயர்வு காண்பெதென்றால் கல்வியிலே நாம் முன்னேற்றத்தை காணவேன்டும். இந்த வலயத்தில் இருக்கின்ற கல்வி அதிகாரிகள்அந்த வேலையை செய்து கொண்டிருக்கின்றார்கள் என நான் நம்புகின்றேன்.
ஏன் என்றால் 5ம் வகுப்பு புலமைப் பரிசில் பரீட்சை சித்தியினை ஓரளவுக்கு கூட்டிக்கொள்ளலாம் எனும் நோக்கில் இந்த கல்வி சமூகம், கல்வி அதிகாரிகள் நல்ல ஆக்கபூர்வமான நடவடிக்களை மேற்கொண்டு வருவதாக நாங்கள் அறிகின்றோம். அந்த வகையில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட கல்வி வலய நிருவாகிகளுக்கு நாங்கள் நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம்.
இந்த பிரதேசத்தில் 1சீ தரத்திலான ஒருசில பாடசாலைகள் இருந்தாலும் 1ஏபி தர பாடசாலைகள் மிகவும் அரிதாகவே காணப்படுகின்றது. அதற்கு மேலாக 1சீ தர பாடசாலைகள் இருந்தும் கூட கல்விப் பட்தாரிகள் பல்கலைக்கழகம் சென்று வௌியேறும் அளவு மிக குறைவாகவே உள்ளது. ஆகவே அந்த வேலையினை நாம் மேற்கொள்ள வேன்டியவர்களாக இருக்கின்றோம்.
ஏற்கனவே மட்டக்களப்பு வலயத்துடன் இணைந்து இருந்த பிரதேசமாக இருந்தாலும் இப் பிரதேசம் புறக்கணிக்கப்பட்ட பகுதியாக இருந்தது என்பதை நீங்கள் அறிவீர்கள்.
தற்போது கோயில்கள் எல்லாம் புனரமைக்கப்படுகின்றது, ஒவ்வொரு மாதமும் கும்பாவிஷேகம் நடைபெறுகின்றது. இவையெல்லாம் சந்தோசமான விடயங்கள். இதனை இந்து சமயத்தில் ஒரு எழுச்சி பெற்றிருக்கின்றது என்றுகூட நாம் சொல்லலாம். அந்தளவு எழுச்சி கல்வியிலே நாம் காண்கின்றபோதுதான் நாம் அனைத்திலும் முன்னேற்றம் அடையமுடியும். அதாவது நாம் கல்வியிலே எழுச்சி பெற்று முன்னேறவேன்டும். வேறு எந்த வழியிலும் நாம் சிறந்த முன்னேற்றத்தினை அடையமுடியாது.
இந்த நாடு ஓர் பல்லினம் வாழ்கின்ற நாடாக இருந்தாலும் கூட அந்த காலத்தில் கல்வியில் கொடிகட்டிப் பறந்தவர்கள் எமது தமிழினம். ஆனால் இன்று பிற்காலத்தில் ஏற்பட்ட விளைவுகள் எமது கல்வியில் தாக்கத்தினை ஏற்படுத்தியிருக்கின்றது. இதனால் நாம் கல்வியில் சற்று பின்னடைவை எதிர்நோக்கியுள்ளோம்.
இந்த இழந்த கல்வியினை நாம் எதிர்காலத்தில் பெறக்கூடியவாறு அனைவரும் ஒன்றுபட்டு செயற்படவேன்டும்'.
என தெரிவித்தார்.












