(எம்.ஏ.றமீஸ்)இம்முறை க.பொ.த உயர் தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள பாடசாலை மாணவர்களின் நன்மை கருதி கல்வி அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள உதவிக் கருத்தரங்கு அக்கரைப்பற்று அல்-முனவ்வறா கனிஷ்ட கல்லூரியில் இடம்பெற்றது.
ஆக்கரைப்பற்று வலயக் கல்விப்பணிப்பாளர் மௌலவி ஏ.எல்.எம்.காசிமின் வழிகாட்டலில் ஏற்பாடு செய்யப்பட்ட இவ்வுதவிக் கருத்தரங்கின் முதல் நாளின்போது தமிழ் மொழிப் பாடத்தினை கற்கும் அக்கரைப்பற்று மற்றும் அட்டாளைச்சேனைக் கல்விக் கோட்டங்களைச் சேர்ந்த 150 இற்கும் மேற்பட்ட பாடசாலை மாணவர்கள் கலந்து கொண்டனர்.
அக்கரைப்பற்று கல்வி வலய தமிழ்ப்பாடத்திற்குப் பொறுப்பான உதவிக் கல்விப்பணிப்பாளர் எம்.ஐ.எம்.ஹனீபா மற்றும் தமிழ்ப்பாடத்திற்குப் பொறுப்பான சேவைக்கால ஆசிரிய ஆலோசகர் எம்.ஏ.சவுறுதீன் ஆகியோரின் ஒழுங்கமைப்பில் நடைபெற்ற இவ் உதவிக்கருத்தரங்கின்போது மாத்தள கல்வி வலய பிரதிக் கல்விப்பணிப்பாளர் என்.அருளானந்தம் பிரதம வளவாளராகக் கலந்து கொண்டு கருத்தரங்கினை நடத்தினார்.
கல்வி அமைச்சின் அறிவுறுத்தல்களுக்கமைவாக ஜூன் 30ஆம் திகதி முதல் ஜூலை மாதம் 5ஆம் திகதி வரை இவ்வுதவிக் கருத்தரங்குகள் பாடசாலை மாணவர்களை மையப்படுத்தி நடைபெறவுள்ளன. இம்முறை க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்கள் பிரதான தெரிவுப்பாடங்களுக்கான மாதிரி வினாத்தாள்களும் அதற்கு வழிகாட்டலுக்கு ஏதுவான இறுவட்டுகளும் தயாரிக்கப்பட்டு கல்வி அமைச்சின் மூலம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


.jpg)
.jpg)
.jpg)











