இலங்கை போக்குவரத்து சபையின் வாழைச்சேனை போக்குவரத்து சபை ஏற்பாடு செய்த இப்தார் நிகழ்வு இன்று (21.07.2014) சாலை பிரதான மண்டபத்தில் இடம் பெற்றது.
சாலை முகாமையாளர் எம்.ஐ.அப்தல் அஸீஸ் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் மார்க்க சொற்பொழிவினை கிழக்கு பல்கலை கழக சிரேஷ்ட விரிவுரையாளர் மௌலவி எம்.ரீ.எம்.ரிஸ்வி நடாத்தியதுடன் சாலையில் கடமை புரியம் தமிழ் முஸ்லிம் ஊழியர்கள் வாழைச்சேனை பொலிஸார் பிரதேசத்தின் பிரமுகர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.












