(சித்தாண்டி நித்தி) கிழக்கு பல்கலைக்கழகத்தில் சுவாமி விபுலானந்தரின் 18வது நினைவுப் பேருரை இன்று 18.07.2014 (வெள்ளிக்கழமை) கிழக்கு பல்கலைக்கழக நல்லையா மண்டபத்தில் நடைபெற்றன.
கிழக்கு பல்கலைக்கழக கலைகலாசாரா பீடாதிபதி கலாநிதி க.இராஜேந்திரம் தலைமையில் நடைபெற்ற இவ் நிகழ்வின்போது கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி கிட்ணன் கோபிந்தராஜா பிரதம அதிதியாக கலந்துகொண்டு பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள சுவாமி விபுலானந்தர் உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவித்தார். அதனைத்தொடர்ந்து அதிதிகள் வரவேற்க்கப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகின.
வருகை தந்த அதிதிகளின் உரையை தொடர்ந்து பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி கிட்டணன் கோபிந்தராஜா அவர்களுக்கு விழாவின் ஏற்பாட்டு குழுத்தலைவர் அவர்களினால் நினைவு நூல் வெளியிடப்பட்டு வழங்கிவைக்கப்பட்டதுடன் வருகை தந்த பீடாதிபதிகள், பதிவாளர் திரு.க.மகேசன் மற்றும் ஏனையோருக்கும் நூல் வழங்கிவைக்கப்படுவதை படத்தில் காணலாம்.
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திலிருந்து வருகைதந்த சைவசித்தாந்த மெய்யியலில் உளவியல் அமிசங்கள் போரசிரியர்.நா.ஞனாகுமாரன் அவர்களுக்கு பல்கலைக்கழக உபவேந்தரினால் நினைவு நூல் வழங்கிவைக்கப்பட்டதை தொடர்ந்து போரசிரியர்.நா.ஞனாகுமாரன் அவர்களினால் சைவ சித்தாந்த மெய்யியலில் உளவியல் அமிசங்கள் எனும் தலைப்பில் பேருரைத் தொடர் நிகழ்த்தப்பட்டன.
சுவாமி விபுலானந்தரின் நினைவுப் பேருரைத் தொடருக்கு பல்கலைக்கழக பீடாதிபதிகள், விரிவுரையாளர்கள், மாணவர்கள் என பலர் கலந்துகொண்டிருந்தனர்.
இந்நிகழ்வின் வரவேற்புரை கிழக்கு பல்கலைக்கழக பிள்ளை நலத்துறை, கல்வி
சிரேஸ்ட விரிவுரையாளர் பேராசிரியர்.மா.செல்வராசா அவர்களும் நன்றியுரையை
ஒப்பீட்டுச் சமய சமூக நல்லுறவுக் கற்கைகள் துறை சிரேஸ்ட விரிவுரையாளர்
திரு.இ.சகாயசீலன் அவர்களினால் இடம்பெற்றன.


.jpg)
.jpg)
.jpg)
.jpg)

.jpg)






.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)



.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)










