வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் இடம் பெற்ற இப்தார் நிகழ்வு

(டில்ஸான்)
அல் கிம்மா சமுக சேவைகள் அமைப்பு வாழைச்சேனை பொலிஸாருடன் இணைந்து ஏற்பாடு செய்த இப்தார் நிகழ்வு இன்று (22.07.2014) வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் இடம் பெற்றது.
வாழைச்சேனை உதவி பொலிஸ் அத்தியட்டசகர் எச்.ஓ.எஸ்;.விதானகே தலைமையில் இடம் பெற்ற இந் நிகழ்வுகளில் மார்க்க சொற்பொழிவினை அல்-கிம்மா நிறுவனத்தின் பணிப்பாளர் மௌலவி எம்.எம்.எஸ்.ஹாறூன் (ஸஹ்வி) நடாத்தினார்.
இவ் இப்தார் நிகழ்வில் கிழக்கு மாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் நந்தன முனசிங்க, மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜயசிங்க, வாழைச்சேனை ஸ்ரீ புத்த ஜயந்தி விகாரையின் விகாராதிபதி நாவாநே அபேவன்ச லங்கார தேரர், ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் கே.பி.எஸ்.ஹமீட், வாழைச்சேனை, வாகரை, கல்குடா, ஏறாவூர் ஆகிய பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், சிவில் பாதுகாப்பு குழுக்களின் ஆலோசனை சபை பிரதி நிதிகள் பிரதேச பாடசாலைகளின் அதிபர்கள் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.