(கல்முனை நிருபர்) அம்பாரை உகனை பிரதேசத்தில் 10 வருடங்களுக்கு மேலாக நடாத்தி வந்த சட்டவிரோத மருந்து விற்பனை நிலையம் ஒன்றை (பாமஸி) பொலிசாரும் சுகாதார பிரிவினரும் இணைந்து நேற்று முன்தினம் முற்றுகையிட்டுள்ளனர்
அம்பாரை விசேட பொலிஸ் செயலணி பிரிவிற்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து பொலிசாரும் அம்பாரை பிராந்திய சகாதார சேவைகள் அலுவலகமும் இணைந்து இவ் முற்றுகையை மேற்கொண்டதுடன் அங்கிருந்த பல மருந்துப்பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
உற்சவங்களுக்கான பொருட்கள் வாடகைக்கு விடப்படும் இடம் என்ற பெயரில் இந்த சட்டவிரோத பாமஸி நடாத்தப்பட்டுள்ளமை இந்த முற்றுகையின்போது கண்டுபிடிக்கப்ப பட்டுள்ளது. இங்கு தற்போது இலங்கையில் தடை செய்யப்பட்டுள்ள குடும்பக் கட்டுப்பாட்டு ஊசி மருந்துகளும் விற்பனை செய்துள்ளமை தெரிய வந்தள்ளது. இத தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசாரும் அம்பாரை சுகாதார சேவைகள் பணிமனையும் இணைந்து நடாத்துகின்றது.