கணனி வகுப்பினை பூர்த்தி செய்த 45 மாணவ மாணவிகளுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

சமாதானத்துக்கும் கல்விக்குமான நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட கணனி வகுப்பினை பூர்த்தி செய்த 45 மாணவ மாணவிகளுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இந்நிறுவனத்தின் உறுப்பினர் ஜனாப். ரிசாட் அவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண விவசாய, கால்நடை உற்பத்தி, கைத்தொழில் அபிவிருத்தி, மீன் பிடி மற்றும், சுற்றுலாத்துறை அமைச்சரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான அல் ஹாபிஸ் நசீர் அஹமட் கலந்து சிறப்பித்தார்.

 இங்கு அமைச்சர் உரையாற்றும் போது இன்றைய காலத்தில் கல்வியின் முக்கியத்துவத்தை தெளிவு படுத்தியதுடன் அதனுடன் கூடிய கவனம் மார்க்க சம்பந்தமான கல்வியினை வளர்ப்பதற்கு ஒவ்வொரு பெற்றோரும் ஆசிரியரும் கல்விமான்களும் சமூகத் தொண்டர்களும் இணைந்து மாணவர்களை ஊக்கப்படுத்துவதிலும் அதற்காக அர்ப்பணிப்பதிலும் அதிக அக்கறை செலுத்த வேண்டுமென்று கூறிய அமைச்சர் இம்மார்க்க அறிவினை வளர்ப்பதற்கு என்னாலான சகல உதவிகளையும் வளர்ந்து வரும் இளைய சமுதாயத்திற்காக எந்நேரமும் உதவ காத்துக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் இந் நிறுவனத்துக்காக அன்பளிப்புத் தொகையொன்றையும் வழங்கி வைத்தார். அத்தோடு அவ்வூர் மக்களை சந்தித்த கௌரவ அமைச்சர் அவர்களின் குறைபாடுகளையும் கேட்டறிந்தார்.

(எம்.எச்.எம். நழீர்)