மட்டக்களப்பு ஏறாவூர்ப் பொலிஸ் பிரிவில் இவ்வாண்டு கடந்த ஏழு மாத காலப்பகுதியில் மதுபோதையுடன் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டின்பேரில் நீதிமன்ற தண்டனைக்குட்படுத்தப்பட்டோரின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்துள்ளதாக பொலிஸ் மோட்டார் போக்குவரத்துப் பிரிவு பொறுப்பதிகாரி எம்டபிள்யுசிபீகே டி சில்வா தெரிவித்தார்.
கடந்த ஜனவரி மாதம் முதல் ஜூலை மாதம் வரையான ஏழு மாத காலப்பகுதியில் மது போதையுடன் வாகனம் செலுத்தியதாக 48 குற்றங்கள் பதிவாகியுள்ளன. இக்குற்றவாளிகளிடமிருந்து இரண்டு இலட்சத்து அறுபதாயிரத்தைந்நூறு ரூபா தண்டமாக அறவிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
36 மோட்டார் சைக்கிள்கள் 08 ஆட்டோக்கள் தலா ஒவ்வொரு கார்இ பஸ்இ லொறி மற்றும் துவிச்சக்கர வண்டி ஆகியன மதுபோதையுடன் செலுத்திய குற்றச்சாட்டின்பேரில் நபர்கள் கைது செய்யப்பட்டு ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டதையடுத்து தண்டப்பணம் அறவிடப்பட்டுள்ளது.
போதையுடன் காரைச் செலுத்திய சாரதி ஒருவரின் அனுமதிப்பத்திரத்திற்கு ஆயுட்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. .
மேலும் சில சாரதிகளுக்கு ஒரு மாதகால சிறை மற்றும் 8 தொடக்கம் 12 மாத கால அனுமதிப்பத்திர தடையும் நீதிமன்றத்தினால் விதிக்கப்ட்டுள்ளதாகப் பொலிஸார் குறிப்பிட்டனர்.
இவ்வாண்டு ஜனவரி மாதம் 8 பெப்ரவரி 8 மார்ச் 5 ஏப்ரல் 7 மே 7 ஜுன் 11 மற்றும் ஜுலை 02 குற்றச்சாட்டுக்கள் பதிவாகியுள்ளன.
2012 ஆம் ஆண்டு முழுக்காலத்திற்கும் 16 குற்றச்சாட்டுக்களும் 2013 ஆம் ஆண்டில் 11 குற்றச்சாட்டுக்களுமே பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது..
இவ்வாறான குற்றங்கள் மற்றும் விபத்துக்களைத் தடுக்க பொலிஸாரினால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் இபொதுநல அமைப்புக்கள் மற்றும் அரசியல்வாதிகளின் ஒத்துழைப்பு எதிர்பார்க்கப்படுவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை ஏறாவூர் முஸ்லிம் பிரதேசங்களில் குறிப்பாக வெள்ளிக்கிழமைகளில் மார்க்க அனுஷ்டானம் கருதி பொஸிஸ் போக்குவரத்துப் பிரிவினரால் வழங்கப்படும் சலுகைகளை சிலர் துஷ்பிரயோகம் செய்வதாக பொலிஸார் கவலை வெளியிட்டுள்ளனர்.