இலங்கை வங்கியின் 75வது ஆண்டு பூர்த்தியினை முன்னிட்டு செங்கலடி கிளையின் ஏற்பாட்டில் பல்வேறு நிகழ்வுகள்

இலங்கை வங்கி 75வது வருட பூர்த்தியினை முன்னிட்டு வங்கியின் செங்கலடி கினையின் ஏற்பாட்டில் அபிவிருத்திக் கடன் மற்றும் மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

செங்கலடி கிளை முகாமையாளர் வி.செகராஜசிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிராந்திய முகாமையாளர் செல்வி சிந்தியா மாட்டின் மற்றும் வங்கி உழியர்கள் வாடிக்கையாளர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் செங்கலடி பிரதேச வைத்தியசாலைக்கு கதிரைகளும் அன்பளிப்பு செய்யப்பட்டன.

16.08.2014 அன்று நாடு முழுவதும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள  பலூன் விடும் நிகழ்வு கிழக்கு மாகாணத்திற்குரிய பிரதான நிகழ்வு மட்டக்களப்பு நகரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் பலூன்களில் தலா 1000 ரூபா பெறுமதியான பண வவுச்சர்கள்; இணைக்கப்பட்டுள்ளன இப் பண வவுச்சர்களை கண்டுபிடிப்பவர்கள் அருகிலுள்ள இலங்கை வங்கி கிளைக்குச் சென்று பணத்தை பெற முடியும் என செங்கலடி கிளை முகாமையாளர் வி.செகராஜசிங்கம் தெரிவித்தார்.