கடலலை நீர்ச்சறுக்கல் தொடரில் கிழக்கு மாகாண அணி சம்பியன்

பொத்­துவில் அறு­கம்பை 2014 ஆம் ஆண்­டுக்­கான கட­லலை நீர்ச்­ச­றுக்கல் சாகச சம்­பியன் போட்டித் தொடரில் கிழக்கு மாகாண அணி சம்­பி­யா­னது.
பொத்­துவில் அறு­கம்­பையில் இறுதிப் போட்டி மிகவும் கோலா­க­ல­மாக இடம்­பெற்­றது.

ரெட்புல் அனு­ச­ர­ணை­யுடன் ஒழுங்கு செய்­யப்­பட்ட இச்­சுற்றுத் தொடரின் இறுதிப் போட்­டியில் தென் மாகாண அணியும் கிழக்கு மாகாண அணியும் விளை­யா­டின.

இதன்­போது 288 புள்­ளி­க­ளைப்­பெற்று கிழக்கு மாகாண அணி­யினர் சம்­பி­ய­னா­ன­துடன் தென்­மா­காண அணி 143 புள்­ளி­க­ளை­ பெற்று இரண்டாம் இடத்தைப் பெற்­றது.
இம்­முறை வெளி­நாட்டு போட்­டி­யா­ளர்கள் இப்­போட்­டியில் கலந்து கொள்­ளாத போதிலும் இச்­சுற்றுப் போட்­டியை கண்டு கழிப்­ப­தற்­காக ஆயிரக்கணக்­கான உள்ளூர் மற்றும் சர்வதேச சுற்றுலா பயணிகள் வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது
http://www.redbull.com/en/surfing/stories/1331673549800/red-bull-ride-my-wave-in-sri-lanka