கிழக்கு மாகாண விவசாயதிணைக்களத்திற்கு வாகனம் வழங்கி வைப்பு

கிழக்கு மாகாண விவசாய நடவடிக்கைகளை ஊக்கிவித்து மாவட்ட விவசாயிகளின் தேவைகளை இலகுபடுத்தும் வகையில் கிழக்கு மாகாண விவசாயதிணைக்களத்திற்கு இன்று வாகனம் ஒன்றை கிழக்கு மாகாண விவசாய கால்நடை உற்பத்தி, கைத்தொழில் அபிவிருத்தி, மீன்பிடி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் வழங்கி வைத்தார்

 இந்த அமைச்சின் நிதி உதவியின் கீழ் வழங்கப்பட்டடுள்ள இந்த வாகனத்தை அமைச்சர் மாகாண விவசாய பணிப்பாளர் எஸ்.எம்.ஹூஸைனிடம் உத்தியோக பூர்வமாக கையளித்தார் இந்த நிகழ்வுக்கு அமைச்சின் செயலாளர் க.பத்மநாதன், கிழக்கு மாகாண கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்கள மாகாணப் பணிப்பாளர் டாக்டர் ரி.கே.தவராஜன் , அமைச்சரின் பிரத்தியோக செயலாளர் எஸ்.எம்.சரூஜ், மற்றும் திணைக்கள பணிப்பாளர்கள் உயர் அதிகாரிகள் என பலரும் கலந்து கொன்டனர்.