மட்டக்களப்பு - வந்தாறுமூலையில் விவசாய விரிவாக்க உதவிப் பணிப்பாளர் அலுவலகம் (Assistant Director of Agriculture Extension Office) திறந்து வைக்கும் நிகழ்வு நேற்று சனிக்கிழமை (09.08.2014) மாலை இந்நிகழ்வு இடம்பெற்றது.
கிழக்கு மாகாண விவசாய கால்நடை அபிவிருத்தி சுற்றுலாத்துறை அமைச்சின் செயலாளர் கே. பத்மநாதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண விவசாய, கால்நடை அபிவிருத்தி சுற்றுலாத்துறை அமைச்சர் நஸீர் அஹமட் , கிழக்கு மாகாண விவசாயப் பணிப்பாளர் எஸ்.எம். ஹூஸைன். அமைச்சின் கிழக்கு மாகாணப் பணிப்பாளர் ரி.கே. தவராஜா. பிரத்தியேக செயலாளர் எஸ்.எஸ்.எம்.சறூஐ; விவசாய பிரதி மாகாணப் பணிப்பாளர் ஆர். ஹரிஹரன், மட்டக்களப்பு மாவட்ட விவசாய விரிவாக்கற் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ஆர். கோகுலதாஸன், வடக்கு விவசாயப் பிரிவின் உதவிப் பணிப்பாளர் வி. லிங்கேஸ்வரராஜா, தெற்கு விவசாயப் பிரிவின் உதவிப் பணிப்பாளர் எஸ். பரமேஸ்வரன், விவசாய விடயதான அலுவலரகள்;, விவசாயப் போதனாசிரியர்கள் உள்ளிட்ட இன்னும் பல விவசாய அதிகாரிகளும், விவசாயிகளும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.












