ஊர் மக்களுக்கு ஏற்பட்டுள்ள உணர்வு கல்விக்காக செயற்படும் தலைவர்களுக்கு ஏற்படாமல் போனது ஏன் ??
கல்வி இல்லாத வாழ்வு வேண்டாம் என்ற நிலை காணப்படும் போது அதை அடைய முடியாமல் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் உள்ள பாடசாலைகள் பல குறைபாடுகள் மத்தியில் இயங்கிக்கொண்டு இருப்பதை எவரும் மறுக்க முடியாது . இருப்பினும் ஒரு சில பாடசாலைகள் மிகவும் சிரமத்தின் மத்தியில் இயங்கிகொண்டு இருப்பதை அநேகர் அறியாமல் இருக்கின்றார்கள் . கல்வியில் ஒரு நல் நிலையை மட்டக்களப்பு மாவட்டம் அடைந்து வரும் நிலையில் சில பாடசாலைகள் அந்த நிலையை அடைய முடியாமல் தத்தளிக்கின்றது காரணம் வளக்குறைபாடேயாகும் . வயிறு நிறைய சாப்பிட்டவனுக்கு இன்னும் உணவைக் கொடுத்தால் என்ன நடக்கும் அவன் வயிறு வெடிக்கும் அல்லவா ? எத்தனையோ உள்ளங்கள் பசியால் துடிக்கின்றார்கள் அவர்களை இனங்கண்டு உணவை கொடுக்கலாம் அல்லவா ? அதை விடுத்து அதிகாரிகள் யாருக்கெல்லாம் உணவு கொடுக்கிறார்கள் தெரியுமா ?
01. ஆசிரியர்கள் நிறைவாய் இருக்கும் பாடசாலைக்கு இன்னும் ஆசிரியர்கள்
02. வகுப்பறை நிறைவாய் உள்ள பாடசாலைக்கு இன்னும் வகுப்பறைகள்
03. நூலகம் உள்ள பாடசாலைக்கு இன்னும் பெரிய நூலகம்
04. கணணி அறை , கணணி வசதி உள்ள பாடசாலைக்கு இன்னும் கணணி அறை , கணணிகள்
05. கதிரை , மேசை நிறைவாய் உள்ள பாடசாலைக்கு இன்னும் கதிரை , மேசைகள்
06. மைதானம் உள்ள பாடசாலைக்கு இன்னும் திருத்தப்பட்ட மைதானம்
இப்படிப்போனால் கிராமப்புறங்களில் இருக்கும் பாடசாலைகளின் நிலை என்ன ? அங்கு உள்ள மாணவர்களின் நிலை என்ன ? கிராமப்புறங்களில் உள்ள மாணவர்கள் செய்த தவறு என்ன ? இதற்கெல்லாம் பதில் சொல்வது யார் ?
இன்று நடப்பது என்னவெனில் பசித்தால் சமைத்து சாப்பிடு என்று சமையலுக்குத் தேவையான அரிசி , கறிவகைகளை ஓரளவு கொடுக்கின்றார்கள் ஆனால் இவைகளை இட்டு சமைப்பதற்குத் தேவையான பாத்திரத்தை கொடுப்பது இல்லை பாத்திரம் இல்லாமல் எங்கு இட்டு சமைப்பது ??
என் . எஸ் . எஸ்


.jpg)
.jpg)










