உதைபந்தாட்ட பயிற்சி முகாம்

(படுவான் பாலகன்) மட்/கடுக்காமுனை வாணி வித்தியாலயத்தில் கல்வி பயில்கின்ற தெரிவு செய்யப்பட்ட 50 ஆண்,பெண் மாணவர்களுக்கான உதைபந்தாட்ட பயிற்சி முகாம் வித்தியாலய மைதானத்தில் கடந்த 20,21,22 ஆகிய மூன்று தினங்கள் பட்டிப்பளைப்பிராந்திய வேள்ட்விஸன் நிறுவனத்தின் அனுசரணையுடன் உக்டா அமைப்பினால் முன்னெடுக்கப்பட்டது.

இப்பயிற்சி முகாமின் முதற்கட்டமாகவே இப்பாடசாலையில் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்றதுடன் தொடர்ந்தும்  மண்முனை தென்மேற்குப் பிரதேசத்தில் இருக்கின்ற கழகங்கள் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதன் ஆரம்ப நிகழ்வுக்கு வேள்ட்விஸன் நிறுவன கல்வித்திட்ட இணைப்பாளர் திரு.R.அமுதராஜ், பாடசாலையின் அதிபர் திரு.சு.தேவராஜன், உக்டா அமைப்பின் தலைவர் திரு.இ.குகநாதன், பொருளாளர் திரு.ம.அருட்செல்வம், பாடசாலையின் விளையாட்டுக்குப் பொறுப்பான ஆசிரியர் திரு.ஜீவரெத்தினம், பயிற்றுவிப்பாளர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.