கோட்டைக்கல்லாற்றிலிருந்து தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலயத்திற்கு பாதயாத்திரை

( ரவிப்ரியா )
கோட்டைக்கல்லாறு பாதயாத்திரை ஒன்றியம் ஏற்பாடு செய்த தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலயத்திற்கான பாதயாத்திரை வெள்ளி (08.08.2014) அதிகாலை அம்பாரைவில் ஸ்ரீ பிள்ளையார்
ஆலயத்திலிருந்து ஆரம்பமாகி, புற்றடி ஸ்ரீ நாகதம்பிரான், மற்றும் ஓந்தாச்சிமடம் ஸ்ரீ அரசடி பிள்ளையார் ஆலயங்களைத் தரிசித்தவாறு செல்வதையும், யாத்திரையில் மாகாணசபை உறுப்பினர் மா.நடராஜாவும் கலந்து கொண்டுள்ளதையும் படங்களில் காணலாம்.