(எம்.ஏ.றமீஸ்)வறட்சியால் பாதிக்கப்பட்ட அக்கரைப்பற்று நுரைச்சோலை விவசாயிகளினது வாழ்வாதாரத்திற்கான உதவியும் நெல் விவசாயம் செய்வதற்கான அனுமதியும் வேண்டி நுரைச்சோலை விவாயிகள் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட கவனஈர்ப்புப் போராட்டம் நேற்று(22) வெள்ளிக்கிழமை காலை அக்கரைப்பற்றில் இடம்பெற்றது.
கடந்த 25 வருடங்களாக தமது காணிகளில் நெற் செய்கை மேற்கொண்டதாகவும், தற்போது இவர்களது காணிகளில் அரசின் திட்ட ஏற்பாடுகளுக்கமைவாக கல்ஓயா சீனிக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவத்தின கீழ் கரும்புச் செய்கை மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும் நிர்ப்பந்திக்கப்பட்டதாகவும் இவர்கள் தெரிவித்து பதாதைகள், சுலோக அட்டைகள் ஏந்தியவாறு நூற்றுக்கணக்கான விவசாயிகள் அக்கரைப்பற்று பிரதான வீதி வழியாகச் சென்று அக்கரைப்பற்று பிரதேச செயலக முன்னால் ஒன்று திரண்டு தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரினை உதவிப் பிரதேச செயலாளர் எம்.எஸ்.எம்.றஸ்ஸானிடம் வழங்கி வைத்தனர்.
ஏற்கனவே நெற்செய்கை மேற்கொள்ளப்பட்ட எமது காணிகளில் நாம் கரும்புச் செய்கை மேற்கொள்ளுமாறு பணிக்கப்பட்ட போதும் கல்ஓயா பிளாண்டேஷன் லிமிட்டட் எவ்வித முறையான ஏற்பாடுகளையும் செய்யவில்லை என்றும், விவசாயிகளுடன் சரியான அணுகுமுறைகளைக் கையாளாமலும் கடந்த சிறுபோக செல் வியசாயத்தினை மேற்கொள்வதற்குத் தடை விதித்ததாவும் குற்றம் சுமத்தினர். இதனால் தமது அடிப்படை வசதிகளைக் கூட செய்ய முடியாத இக்கட்டான சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டதாகவும், தற்போது வாழ வழியற்று தத்தளிப்பதாகவும் உதவிப் பிரதேச செயலாளரிடம் இவ் அமைப்பினர் தெரிவித்தனர்.
இவ் அமைப்பினர் தமது மூன்று அம்சக் கோரிக்கைகள் அடங்கிய மகஜரினைக் கையளித்தனர். அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
01. 2013-2014 சிறு போகத்திற்கான நெல் விவசாயத்தினை மேற்கொள்வதற்கு சாதகமான சூழ்நிலை இருந்த போதிலும் கரும்புச் செய்கை மேற்கொள்ள வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தினால் நாம் அதனை செயங்கை பண்ணுவதற்கு ஆயத்தமாக இருந்த போதிலும், நீர் பற்றாக்குறையினால் எமது காணிகள் தரிசு நிலமாக்கப்பட்டு எமது வாழ்வாதாரமும் பறிபோனது. ஆகையால் எமக்கு ஏற்பட்ட இவ் இழப்பீட்டிற்கு வறட்சி நிவாரணம் பெற்றுத் தர ஆவண செய்யவும்.
02. தற்சமயம ஏற்பட்டுள்ள வறட்சியின் காரணமாவும், எதிர்காலம் மழை காலமாக இருப்பதாலும், கரும்புச் செய்கை 2014 செப்டம்பர் மாதம் முதல் 2015 மார்ச் மாதம் வரை மேற்கொள்வதற்கு அசாதகமான சூழ்நிலை ஏற்படுமென்பதால் சிறு போகத்தில் பாதிக்கப்பட்ட நெல் விவசாய பயிச்ச் செய்கையை மேற்கொள்வதற்கு உரிய வழிகளை செய்து தரவும்.
03கடந்த சிறுபோகத்தில் கரும்போ, வேளாண்மையோ செய்கை பண்ண முடியாமல் நிறுத்தப்பட்டதால் எமது பொருளாதாரம் பாரிய அளவில் பறி போயுள்ளது. அதுமட்டுமல்லாமல் அன்றாட வாழ்க்கையும் பாதிக்கப்பட்டு மிகவும் இக்கட்டான ஒரு சூழ்நிலைக்கு தள்ளப்பட்டோம். எமக்கேற்பட்ட இந்நிலையினை கருத்pற் கொண்டு எமது நியாயமான கோரிக்கைகளுக்கு வழி சமைத்துத் தருமாறு கோருகின்றோம்.


.jpg)
.jpg)
.jpg)
.jpg)











