இலங்கையில் ஊடக
வியலாளர்களுக்கு புலனாய்வு துறையினரால் அச்சுறுத்தல் மாத்திரமல்ல அதிகாரிகளினாலும்
அச்சுறுத்தல் விடுக்கப்படுகின்றது இதனை நிறுத்தவேண்டுமென மட்டக்களப்பு மாவட்ட
தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற
உறுப்பினர் பா. அரியநேத்திரன் தெரிவித்தார்.
இணையத்தளம்
ஒன்றில் வெளியான செய்தி தொடர்பாக சந்தேகத்தின் பேரில் பிரதேச ஊடகவியலாளருக்கு
எதிராக மட்டக்களப்பு மாவட்ட அதிகாரி ஒருவரினால் பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டு
விசாரணைக்கு அழைத்தமை சம்மந்தமாக அதனை கண்டித்து வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலையே
இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இலங்கையில்
ஊடகவியலாளர்களுக்கு புலனாய்வு பிரிவினராலும் அரசாங்க படைகளாலும் அச்சுறுத்தல்
விடுக்கப்பட்டுவருவதொன்று தற்பொழுது புதிதாக
அதிகாரிகளாலும் அச்சுறுத்தால் விடுக்கப்படுவதனை அறியக்கூடியதாக உள்ளது.
குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் இருக்கக்கூடிய ஊடகவியலாளர்களை அச்சுறுத்;தும் நடவடிக்கையை சில அதிகாரிகள் ஏற்படுத்தி
இருக்கின்றனர் இதன் ஒருகட்டமாக மட்டக்களப்பில் இருக்கும் ஊடகவியலாளர் ஒருவர்
பொலிஸ் நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டு முறைப்படு பதிவு செய்யப்பட்டதாக நாங்கள் அறிகின்றோம்.
இது உண்மையில் கண்டிக்கத்தக்க
ஒருவிடயம் ஊடகம் என்பதும் ஊடகவியலாளர் என்பதும் சுதந்திரமாக செயற்படும் நாடக
இலங்கை இருக்கின்றது என்று அரசாங்கம் சொன்னாலும் கூட இன்று ஊடக சுதந்திரம் என்பது இன்றுவரை இல்லாமல்
இருப்பதனை நாங்கள் அவதானிக்கின்றோம் இதுவொரு பாரதூரமான விடயமாககும்.
எல்லோரும் செய்தி
எழுதக்கூடிய இணையத்தளங்களில் வருகின்ற செய்திகளை வைத்துக் கொண்டு ஊடகவியலாளர்களை
விசாரணைக்குட்படுத்த வைப்பது ஏற்கமுடியாத விடயமாகும் பிழையான செய்திகளை
வெளியிட்டால் ஊடக நிறுவனங்களை சட்டத்தின் முன்னிறுத்தக் கூடிய சட்டந்தான்
இலங்கையில் இருகின்றது இருந்தும் மட்டக்களப்பில் அவற்றிக்கு
முரணாக சந்தேகத்தின் பேரில் பொலில் முறைப்பாடு செய்து அச்சுறுத்தும் செயற்பாட்டில்
ஈடுபட்டமை இலங்கையில் எந்தளவில் ஊடக சுதந்திரம் இருக்கின்றது என்பதற்கான சிறந்த
எடுத்துக்கட்டாக உள்ளது.
அதுவும்
மாவட்டத்தில் இருக்கக்கூடிய அரசாங்க அதிகாரி என்ற வகையில் இது பொருத்தப்பாடு
அற்றசெயற்பாடக நான்கருதுகின்றேன் இவ்வாறான கீழ்தரமான செயற்பாடுகளை
நிறுத்தி ஊடக வியலாளர்களை சுதந்திரமாக செயற்படுவதற்கு உதவிபுரியுமாறு
கேட்டுக்கொள்கின்றேன் இந்நிலை தொடருமானால் மக்களை ஒன்று திரட்டி அந்த
அதிகாரிக்கு எதிராக ஆர்பாட்த்தில்
ஈடுபடவேண்டியது தவிர்க்கமுடியாது என்பதனை தெரிவிக்கவிரும்புகின்றேன் வடகிழக்கு
ஊடகவியலாளர்களுக்கு இவ்வாறான நிலை தொடர்ந்தால் இது சம்பந்தமாக பாராளுமன்றத்திலும்
கதைப்பதற்கு தயங்கமாட்டேன் என்பதனை கூறிவைக்க விரும்புகின்றேன்.












