மொழிதல் ஆய்வு சஞ்சிகை முதல் இதழ் வெளியீட்டு விழா

மொழிதல் ஆய்வு சஞ்சிகையின் முதல் இதழ் வெளியீட்டு விழா சனிக்கிழமை(23) மட்டக்களப்பு கல்லடியிலுள்ள கிழக்குப் பல்கலைக்கழக  விபுலானந்தா கற்கைகள் நிறுவக மண்டபத்தில் சஞ்சிகையின் பிரதம ஆசிரியர் கலாநிதி சி. சுந்திரசேகரத்தின் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை கலாச்சார பீடத்தின் பிடாதிபதி கலாநிதி க.இராஜேந்திரம், சிறப்பு அதிதியாக சுவாமி விபுலானந்தா கற்கைகள் நிறுகத்தின் பணிப்பாளர் கலாநிதி கே.பிறேம்குமார், கௌரவ அதிதிதிகளாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வி தங்கேஸ்வரி, த. கோபாலகிருஷ்ணன், முன்னாள் வடக்கு கிழக்கு மாகாண கலாசார உதவிப் பணிப்பாளர் கலாபூசணம் செ. ஏதிர்மன்னசிங்கம், கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் கவிஞருமான துரைராஜசிங்கம் ஆகியோருடன் கலை இலக்கிய ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இதன் போது அதிதிகளினால் சிறப்புரை நிகழ்த்தப்பட்டு பேராசிரியர் சி.மௌனகுரு அவர்களினால் சஞ்சிகை ஆய்வுரை நிகழ்த்தப்பட்டது. 

பின்னர் பிரதம அதிதியினால் சஞ்சிகை வெளியீடு செய்யப்பட்டதுடன் கௌரவ அதிதிகளுக்கு சஞ்சிகைப் பிரதிகளும் வழங்கப்பட்டது. பின்னர் கௌரவ சிறப்பு அதிதிகளினால ஆர்வலர்களுக்கு சிறப்பு பிரதிகள் வழங்கப்பட்டது.