"கிராமத்திற்கு ஒரு வேலைத்திட்டம்" மகிழவட்டவானில் மீள்குடியேற்றப் பிரதியமைச்சரால் ஆரம்பம்

(சுரேந்திக்கா & வரதன்)
கிராமத்திற்கு ஒரு வேலைத்திட்டத்தின்கீழ் நடைமுறைப்படுத்தப்பட்டவரும் உட்கட்டமைப்பு வேவைத்திட்டங்கள் பல வவுணதீவு பிரதேசத்தில் நேற்று 29ம் திகதி வைபவரீதியாக ஆரம்பித்துவைக்கப்பட்டது.

இத்திட்டத்தினை மீள்குடியேற்றப் பிரதியமைச்சர் வினாயகமூர்த்தி முரளிதரன் அவர்கள் நேற்றயதினம் மகிழவட்டவான் கிராமத்தில் ஆரம்பித்து வைத்தார்.

இதன்போது மண்முனைமேற்கு பிரதேச செயலாளர் எஸ்.சுதாகர், மீள்குடியேற்றப் பிரதியமைச்சரின் இணைப்புச் செயலாளர் பொன்.ரவீந்திரன், உதவி திட்டமிடல் பணிப்பாளர் ரி.நிர்மல்ராஜ் உட்பட அரச உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

இவ் வேலைத்திட்டத்திற்காக பொருளாதார அபிவிருத்தி அமைச்சுமூலம் ஒரு கிராமத்திற்கு ரூபா.10இலட்சம் எனும் அடிப்படையில் அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்டடுள்ளது. இதில் இக்கிராமத்திற்கு ரூபா.10 இலட்சம் செலவில் கொங்கிறீற் வீதி அமைத்தலுக்காக நிதி வழங்கப்பட்டுள்ளது.

இந் நிகழ்வில் இக்கிராம மக்களின் குறைகள், தேவைப்பாடுகள பிரதியமைச்சர் முரளிதரனினால் கேட்டறியப்பட்டது. இங்கு பிரதானமாக காணப்படும் குடிநீர் பிரச்சனை மற்றும் வீட்டுத்திட்டம் (வீடு) போன்றன மக்கள் முன்வைத்தனர்.

இதில் குடிநீர் பிரச்சனையினை மிக விரைவாக நிவர்த்தி செய்யப்படும் என மக்களிடம் உறுதியளித்தார். மேலும் வீடுவழங்கும் திட்டம் எதிர்காலத்தில் கட்டம் கட்டமாக வழங்க நடவடிக்ககை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

கடந்த காலத்தில் இப் பிரதேசத்திலுள்ள பதிவுசெய்யப்பட்ட மாதர் அபிவிருத்தி சங்கங்கள் அனைத்திற்கும் பிரதியமைச்சரினால் நிதி வழங்கப்பட்டது. இந்நிதி இவ் மகிழவட்டவான் கிராம த்திற்கும் வழங்கப்பட்டது இதற்காக இவ் மாதர்சங்க உறுப்பினர்கள் பிரதியமச்சர் முரளிரதனுக்கு நன்றிதெரிவித்தனர்.

இதன்போது இக் கிராமத்திலிருந்து பெருமளவான பொதுமக்கள் கலந்துகொண்டனர்