(சித்தாண்டி நித்தி) பெண்கள் முகாமைத்துவ அபிவிருத்தி திட்டத்தினரின் அணுசரனையில் நாட்டிலுள்ள சிறந்த பெண் சுயதொழில் முயற்சியாளர் சாதனைக்கான விருது வழங்கும் நிகழ்வு கடந்த 25.07.2014ஆம் திகதி கொழும்பு தாஜ் சமுத்திரா ஹொட்டலில் நடைபெற்றன.
விருது வழங்கி கௌரவிக்கும் நிகழ்வுக்கு நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் இருந்து வேவ்வேறு வகையான பெண் சுயதொழில் முயற்சியாளர்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறுபட்ட பெண் சுயதொழில் முயற்சியாளர்கள் இருந்தபோதும் மட்டக்களப்பு முகத்துவாரம் பார் வீதியிலுள்ள திருமதி. விஜயலெட்சுமி அன்ரனி ஜேசுதாசன் படங்களுக்கு பிரேம் செய்தற்காகன சிறந்த பெண் சுயதொழில் முயற்சியாளராக தெரிவுசெய்யபட்டு நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் மட்டக்களப்பு மாவட்டத்தின் சிறந்த பெண்கள் சுயதொழில் முயற்சியாளருக்கான சாதனை என்ற விருதை பொருளாதார அபிவிருத்தியமைச்சர் கௌரவ பசீல் ராஜபக்சா அவர்களிடம் இருந்து பெற்றுக்கொண்டார்.
சிறந்த பெண்கள் சுயதொழில் முயற்சியாளருக்கான விருதை பெற்றுக்கொண்ட 60 வயது நிரம்பிய திருமதி.விஜயலெட்சுமி இதுபற்றி கூறிப்பிடும்போது, நான் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து சிறந்த பெண்கள் சுயதொழில் முயற்சியாளராக தெரிவுசெய்யபட்டு மாவட்டத்திலுள்ள பெண் சுயதொழில் முயற்சியாளர்களுக்கு ஓர் உதாரணமாக இவ்விருதை பெற்றுக்கொண்டமைக்காக பெருமிதமடைவதோடு எதிர்காலத்தில் என்னைப்போன்று பல சிறந்த பெண் சுயதொழில் முயற்சியாளர்கள் வளரவேண்டும் எனவும் எதிர்பார்க்கின்றேன் என கூறிப்பிட்டதோடு, எனது கணவர் அன்ரனி ஜேசுதாசன் படங்களுக்கு பிரேம் செய்துகொடுக்கும் தொழிலை செய்து வந்தாகவும் அவர் மரணித்த பின்பு, எனது இரு பிள்ளைகளையும் வளர்ப்பதற்கும் அவர்களுடைய படிப்பு மற்றும் வீட்டு செலவுக்கு போதிய வருமானம் போதியதாக இல்லாமையினால் எனது கணவர் இருக்கும்போது தொழிலை நான் பார்த்துக்கொண்டு அவருடன் இணைந்து செய்துவந்ததால் இத்தொழிலில்பெற்ற அனுபவத்தைக் கொண்டு படிப்படியாக தொழிலை செய்துவந்ததினால் அதில் வரும்வருமானத்தைக் கொண்டு குடும்ப பொறுப்புகளை கவனித்தகவும், எனது தொழில் முயற்சியினால் படிப்படியாக உயர்ந்து 29 வருடகாலமாக இப்போது வரைக்கும் தான் ஒரு தனியொரு பெண்ணாக இருந்து இன்றுவரைக்கும் நடாத்தி வருவதினால் தான் இவ்விருதி கிடைத்தது என பெருமையுடன் அவர் கூறியதுடன் எனது முயற்சியினால் கைவேலைகளுடன் கூடிய வளங்களைக் கொண்டு போட்டோ பிரேம்களை வருகின்ற வாடிக்கையாளர்களுக்கு மிகவும் அழகாகவும் நேர்தியாகவும் செய்துகொடுத்ததினால் மாட்டத்திலுள்ள அதிகமான வாடிக்கையாளர்கள் என்னிடம் தான் படம் பிரேம் செய்வதற்கு வருவார்கள். நான் வாடிக்கையாளர்களின் நன்மதிப்பைப்பெற்றதினால் தொடர்ந்து இத்தொழிலை செய்யக்கூடியதாக இருந்தது எனவும் அவர் கூறினார்.
மேலும் கூறிப்பிடுகையில் இத்தொழிலை செய்வதற்கு ஒரு சிறிய கடை கூட இல்லாத நிலையில் இப்போது வீட்டில் தான் எனது தொழிலை நடரத்திவருகின்றேன். குறைவான தொழிநுட்பத்தை பயன்படுத்தி எனது சரீத முயற்சியால்தான் அதிகமான வேலைகளை செய்துவருகின்றேன். நான் கணவனை இழந்த விதவை, வயசு ஆகிய நான் தொடர்ந்து செய்வதற்குரிய போதிய மன உறுதியில்லாதினால் வாழ்வாதரத்தை வளப்படுத்திக் கொள்வதற்கு உரிய தொழிலை தொடர்ந்து செய்வதகும் தொழிலை இலகுவாக செய்துகொள்வதற்குரிய இயந்திரங்களை இயன்றவர்கள் பெற்றுதந்து உதவிசெய்யும் பட்சத்தில் இத்தொழிலை மேலும் நான் தொடர்ந்து செய்து கொள்ளக் கூடியதாகவிருக்கும் எனவும் அவர் கூறிப்பிட்டார்.


.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)










