மட்டக்களப்பு கீரிமடு சித்தி விநாயகர் தேவஸ்தானத்தின் வருடாந்த மஹோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பம்


(சிவம்)

மட்டக்களப்பு கீரிமடு சித்தி விநாயகர் தேவஸ்தானத்தின் வருடாந்த மஹோற்சவத்தின் ஆரம்ப நிகழ்வான கொடியேற்றம் இன்று புதன்கிழமை (20) நண்பகல் 12.00 மணிக்கு இடம்பெற்றது.

மூலஸ்தான பூஜை மற்றும் வசந்த மண்டப பூஜை இடம்பெற்று கொடிறே;றப்பட்டது. மஹோற்சவ பிரதம குரு சிவஸ்ரீ க.கு. சோதிநாதக் குருக்கள் மற்றும் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ த. ஜெகநாத சிவாச்சாரியார்கள் தலைமையில் நடைபெற்றது.

எதிர்வரும் புதன்கிழமை (27) புதிதாக அமைக்கப்பட்ட தேரின் வெள்ளோட்டம், வியாழக்கிழமை (28) இரதோற்சவம் மற்றும் வெள்ளிக்கிழமை (29) தீர்த்தோற்சவம் என்பன இடம்பெறவுள்ளது.